"விஜயநகரப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

890 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''விஜயநகரப் பேரரசு''' இந்தியாவின் [[தக்காணப் பீடபூமி|தக்காணப்]] பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இது 1336 ஆம் ஆண்டில் [[முதலாம் ஹரிஹரர்]] மற்றும் அவரது சகோதரரான [[முதலாம் புக்கராயர்]] ஆகியோரால் நிறுவப்பட்டது. இப் பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 1565 ஆம் ஆண்டில் [[தக்காணத்துச் சுல்தானகங்கள்|தக்காணத்துச் சுல்தான்களால்]] ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந் நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான [[கர்நாடகம்|கர்நாடகத்தில்]] உள்ள [[ஹம்பி]]யைச் சுற்றிலும் காணப்படுகின்றன. மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான [[டொமிங்கோ பயஸ்]] (Domingo Paes), [[பெர்னாவோ நுனிஸ்]] (Fernao Nuniz), [[நிக்கோலோ டா கொன்ட்டி]] (Niccolò Da Conti) ஆகியோரது ஆக்கங்களிலிருந்தும், உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் இதன் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்ட [[தொல்லியல்]] ஆய்வுகளும் விஜயநகரப் பேரரசின் வலு மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன.
 
 
[[File:Dharmeshwara Temple Plates.jpg|thumb|right|Dharmeshwarar கோயில், [[Hoskote]] (பெங்களூர் அருகே), தமிழ் கோவில் செப்பு தகடுகள், விஜயநகரப் இராச்சியம்]]
[[File:Dharmeshwara Temple Plates HT-34.jpg|thumb|right|Dharmeshwarar கோயில், [[Hoskote]] (பெங்களூர் அருகே), தமிழ் கோவில் செப்பு தகடுகள், விஜயநகரப் இராச்சியம்]]<ref name=RiceIX>{{cite book|last1=Rice|first1=Benjamin Lewis|title=Epigraphia Carnatica: Volume IX: Inscriptions in the Bangalore District|date=1894|publisher=Mysore Department of Archaeology|location=Mysore State, British India|url=https://archive.org/details/epigraphiacarnat09myso|accessdate=11 August 2015}}</ref>
 
இப் பேரரசு தொடர்பான [[நினைவுச் சின்னம்|நினைவுச் சின்னங்கள்]] பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் [[ஹம்பி]]யில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. [[விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி]] தென்னிந்தியக் [[கட்டிடக்கலை]]யின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் [[நாட்டார் கட்டிடக்கலை|நாட்டார் மரபு]]களின் தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் [[திராவிடக் கட்டிடக்கலை]]யிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில் [[தக்காணத்துச் சுல்தானகங்கள்|வட தக்காணத்துச் சுல்தானகக்]] கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன.
55

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1971037" இருந்து மீள்விக்கப்பட்டது