திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8,461 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றையாக்கம்
சி (இற்றையாக்கம்)
சி (இற்றையாக்கம்)
 
செப்டம்பர் 27, ஞாயிறு: காலை 9:15 மணி - பிலடெல்பியாவின் புனித சார்லசு பொரோமெயோ குருத்துவக் கல்லூரியின் புனித மார்ட்டின் ஆலயத்தில், திருத்தந்தை பிரான்சிசு, குடும்பங்களின் உலக மாநாடு தொடர்பான ஆயர்களை சந்தித்து உரையாற்றுகிறார். காலை 11 மணி - திருத்தந்தை பிரான்சிசு, பிலடெல்பியாவின் சிறைக்கூடங்களில் ஒன்றாகிய கரன்-ப்ரம்கோல்ட் சிறைக்கூடத்திற்குச் சென்று, அங்கு சிறைக் கைதிகள் சிலரையும், அவர்களுடைய குடும்பத்தாரையும், சிறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுகிறார். மாலை 4 மணி - திருத்தந்தை பிரான்சிசு, குடும்பங்களின் உலக மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, திருப்பலி நிறைவேற்றி, மறையுரை ஆற்றுகிறார். மாலை 7 மணி - பிலடெல்பியாவின் வானூர்தி நிலையத்தில் குடும்பங்களின் உலக மாநாடு தொடர்பான நன்கொடையாளர்கள், பணி ஆர்வலர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போன்றோரை சந்தித்து உரையாற்றுகிறார். மாலை 8 மணி - கியூபா நாட்டிலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் தமது 9 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரியாவிடை பெற்று, திருத்தந்தை பிரான்சிசு உரோமை நகருக்குப் பயணமாகிறார் (மேலதிகத் தகவல்கள் கீழே)
|}-
| 15 || [[கென்யா]], [[உகாண்டா]], [[மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு]] || நவம்பர் 25-30|| 2015 || திருத்தந்தை பிரான்சிசு [[கென்யா]] நாட்டில்:
நவம்பர் 25, 2015 - புதன் - திருத்தந்தை பிரான்சிசு கென்யாவின் நைரோபி நகரில் ஜோமா கென்யாட்டா விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். அவரை கென்யாவின் குடியரசுத் தலைவர் உகுரு கென்யாட்டா வரவேற்கிறார். நாட்டு அதிகாரிகளையும் அரசுத் தூதுவர்களையும் திருத்தந்தை சந்திக்கிறார். திருத்தந்தையின் உரை.<ref>[http://w2.vatican.va/content/francesco/en/travels/2015/outside/documents/papa-francesco-africa-2015.html திருத்தந்தையின் ஆப்பிரிக்கப் பயணம்]</ref>
 
நவம்பர் 26, வியாழன் - பல்சமயத் தலைவர்களோடு திருத்தந்தை உரையாடுகிறார். நைரோபி பல்கலைக்கழகப் பெருவளாகத்தில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிறைவேற்றுகிறார். கனத்த மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 200 ஆயிரம் மக்கள் திருப்பலியில் பாடல்களோடும் நடன ஆட்டத்தோடும் கலந்துகொள்கின்றனர். மக்களுக்கு மறையுரை ஆற்றிய திருத்தந்தை கூறியது: “இன்றைய உலகத்தில் மதத்தின் பெயரால் சிலர் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இது ஒரு மாபெரும் தவறு. எந்தவொரு மதமும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது. சமய நம்பிக்கை கொண்ட எல்லா மக்களும் உலகத்தில் அமைதி, நல்லிணக்கம் உருவாகிட உழைக்க வேண்டும். ஏழை மக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கின்ற சுற்றுச் சூழல் சீரழிவை அவர்கள் தடுத்து நிறுத்தக் கடமைப் பட்டுள்ளார்கள். சமூக மற்றும் அரசியல் துறைகளில் ஊழல் கோலோச்சாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அனைவருடைய கடமை ஆகும்.”
 
பிற்பகலில் திருத்தந்தை குருக்கள், ஆண் துறவியர், பெண் துறவியர், குருமாணவர்கள் ஆகியோரை சந்தித்து உரையாற்றினார்.
 
மாலையில் திருத்தந்தை நைரோபியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பிரதேச அலுவலகலத்தில் உரையாற்றினார்.
 
நவம்பர் 27, வெள்ளி: திருத்தந்தை பிரான்சிசு நைரோபி நகரின் ஏழைமக்கள் குடியிருப்பான “கங்கேமி” என்ற பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்திக்கிறார்.
 
கென்யாவின் இளையோரை சந்திக்கிறார்; உரையாற்றுகிறார்.
 
கென்யாவின் ஆயர்களை சந்தித்து உரையாற்றுகிறார்.
 
[[உகாண்டா]] நாட்டுக்குப் பயணமாகிறார். மாலையில் உகாண்டாவின் எண்டேபே விமான நிலையம் சென்றடைகிறார். அரசு தரப்பில் வரவேற்பு – திருத்தந்தை பிரான்சிசு அரசு அதிகாரிகளுக்கும் அரசுத் தூதுவர்களுக்கும் உரையாற்றுகிறார். பின்னர் ஆசிரியர்களுக்கும் மறைக்கல்வி புகட்டுநர்களுக்கும் உரையாற்றுகிறார்.
 
நவம்பர் 28, சனி: உகாண்டா நாட்டின் நமுகோங்கோ நகரில் அமைந்துள்ள “உகாண்டா ஆங்கிலிக்கன் மறைசாட்சியர் திருத்தலம்” சென்று சந்திக்கிறார். பின்னர் “உகாண்டா கத்தோலிக்க மறைசாட்சியர் திருத்தலம்” செல்கிறார். அங்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றுகிறார்.
 
இளையோரை சந்திக்கிறார். அன்பு இல்லம் செல்கிறார். உகாண்டா நாட்டு ஆயர்களைப் பேராயர் இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார். மறைமாவட்டப் பேராலயத்தில் குருக்கள், துறவியர், குருமாணவர்கள் ஆகியோரை சந்தித்து உரையாற்றுகிறார்.
 
நவம்பர் 29, ஞாயிறு: உகாண்டா நகரின் எண்டேபே விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சிசுக்குப் பிரியாவிடை வழங்கப்படுகிறது. திருத்தந்தை, [[மத்திய ஆப்பிரிக்க குடியரசு|மத்திய ஆப்பிரிக்க குடியரசின்]] தலைநகரான பாங்குயி நகர் விமான நிலையத்தில் வந்து சேர்கிறார். நாட்டுத் தலைவர்களை சந்திக்கிறார். நற்செய்திசார் சபையினரை சந்திக்கிறார். கத்தோலிக்க குருக்கள், துறவியர், மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இளையோரை சந்தித்து உரையாற்றுகிறார். ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கேற்கிறார்.
 
நவம்பர் 30: திங்கள்: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் முசுலீம் தலைவர்களை சந்தித்து உரையாடுகிறார். திருப்பலி நிறைவேற்றுகிறார். திருப்பயணத்தை நிறைவுசெய்து உரோமை நகருக்குத் திரும்புகிறார்.
|}
==திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணம் (சனவரி 13-15, 2015) பற்றி சில தகவல்கள்==
2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார். உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவியிருக்கின்ற கத்தோலிக்க திருச்சபையின் மக்களை நேரில் சந்தித்து உரையாட அவர் பல பயணங்களை மேற்கொண்டார். 2013-2014 ஆண்டுகளில் அவர் பன்னாட்டுப் பயணம் சென்ற நாடுகளுள் கீழ்வருவன அடங்கும்: பிரேசில், நடு ஆசியா (இசுரயேல், யோர்தான், பாலத்தீனம்), தென் கொரியா, அல்பேனியா, பிரான்சு, துருக்கி.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1973161" இருந்து மீள்விக்கப்பட்டது