சப்பானியத் தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சப்பானியத் தோட்டம்''' (日本庭園 ''nihon teien'') சிற்றுருவ இலக்கியலானதும் (idealized) உயரளவு பண்பியத்தன்மை (abstract) கொண்டதும் உண்மைத்தன்மை சாராததுமான [[நிலத்தோற்றம்|நிலத்தோற்றத்தை]] உருவாக்கும் ஒரு சப்பானிய மரபுவழித் தோட்டம் ஆகும். பேரரசர்களினதும், பிரபுக்களினதும் தோட்டங்கள் பொழுதுபோக்குக்காகவும், [[அழகியல்]] இன்பத்துக்காகவும் வடிவமைக்கப்பட்ட அதேவேளை, [[புத்த கோயில்]]களின் தோட்டங்கள் நல்ல சிந்தனைகள், [[தியானம்]] போன்றவற்றுக்காக வடிவமைக்கப்பட்டன.
 
தியானத்துக்கானவையும் நீருக்குப் பதிலாக வெள்ளை மணல் பயன்படுத்தப்படுவதுமான [[கரேசன்சுயி]], [[சப்பானியப் பாறைத் தோட்டம்]], சென் தோட்டம் போன்றவையும்; [[சப்பானிய தேநீர் விழா]] நடத்தப்படுவதற்கான எளிமையானதும், கரடுமுரடானதுமான ''[[ரோசி]]''; வருபவர்கள் சுற்றி நடந்து பார்ப்பதற்குரிய கையூ-சிக்கி-தையென், உலா வீதி அல்லது உலாவு தோட்டம் ஆகியனவும்; சுபோ-நிவா, சிறிய முற்றத் தோட்டம் என்பனவும் சப்பானியத் தோட்டப் பாணியுள் அடங்குகின்றன.
 
சப்பானியத் தோட்டங்கள் சீனத் தோட்டங்களின் செல்வாக்கின் கீழேயே உருவாகி வளர்ந்தன. ஆனாலும், சப்பானியத் தோட்ட வடிவமைப்பாளர்கள் படிப்படியாக, சப்பானியக் கட்டிடப்பொருட்களினதும் பண்பாட்டினதும் அடிப்படையில் தமது சொந்த அழகியலை உருவாக்கத் தொடங்கினர். ஏடோ காலத்தில் சப்பானியத் தோட்டங்கள் தமது சொந்தத் தனித்துவம் வாய்ந்த தோற்றத்தைக் கொண்டிருந்தன. 19ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, சப்பானியத் தோட்டங்கள் மேனாட்டுப் பின்னனணிகளுக்கு ஏற்ப தகவமையத் தொடங்கின.
 
[[பகுப்பு:சப்பானியத் தோட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சப்பானியத்_தோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது