சப்பானியத் தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
சப்பானியத் தோட்டங்கள் சீனத் தோட்டங்களின் செல்வாக்கின் கீழேயே உருவாகி வளர்ந்தன. ஆனாலும், சப்பானியத் தோட்ட வடிவமைப்பாளர்கள் படிப்படியாக, சப்பானியக் கட்டிடப்பொருட்களினதும் பண்பாட்டினதும் அடிப்படையில் தமது சொந்த அழகியலை உருவாக்கத் தொடங்கினர். ஏடோ காலத்தில் சப்பானியத் தோட்டங்கள் தமது சொந்தத் தனித்துவம் வாய்ந்த தோற்றத்தைக் கொண்டிருந்தன. 19ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, சப்பானியத் தோட்டங்கள் மேனாட்டுப் பின்னனணிகளுக்கு ஏற்ப தகவமையத் தொடங்கின.
 
==வரலாறு==
===தோற்றம்===
அசுக்கா காலத்தில் சப்பானிய வணிகர்கள், சீனாவில் உருவாக்கப்படும் தோட்டங்களைக் கண்டு அவற்றின்பால் ஈர்க்கப்பட்டபோது இவ்வகைத் தனித்துவம் வாய்ந்த தோட்டங்களுக்கான எண்ணக்கரு உருவாகியது. சின்னப் பண்பாட்டின் பல்வேறு அம்சங்கள் வணிகர்களூடாக சப்பானுக்கு இறக்குமதி செய்யப்படுவது அக்காலத்தில் அடிக்கடி நிகழும் ஒன்றுதான். இன்று, சப்பானின் பல பகுதிகளிலும், மேல் நாடுகளிலும், சப்பானியத் தோட்டக் கலை இன்னும் முழுத் தீவிர வெளிப்பாட்டுடன் பேணப்படுவதுடன், தமது சொந்த சப்பானியத் தோட்டங்களை உருவாக்க விருப்பம் கொண்ட கலைஞர்களுக்குத் தொடர்ந்து அகத்தூண்டல்களை அளித்துவருகின்றது.
 
[[பகுப்பு:சப்பானியத் தோட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சப்பானியத்_தோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது