இசுடாம்போர்டு இராஃபிள்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,454 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *விரிவாக்கம்*
(→‎top: *விரிவாக்கம்*)
 
'''சேர் தாமசு இசுடாம்போர்டு இராஃபிள்சு''', [[அரச கழகம்|எஃப்ஆர்எஸ்]] (''Sir Thomas Stamford Raffles'', 6 சூலை 1781 – 5 சூலை 1826) பிரித்தானிய [[wikt:statesman|அரசியலாளரும்]], பிரித்தானிய சாவகத்தின் துணைநிலை ஆளுநரும் (1811–1815) பிரித்தானிய பென்கூலனின் ஆளுநரும் (1817–1822), [[சிங்கப்பூர்|சிங்கப்பூரை]] நிறுவியவரும் ஆவார். தவிரவும் [[நெப்போலியப் போர்கள்|நெப்போலியப் போர்களின்]] அங்கமாக டச்சு, பிரான்சியப் படைகளிடமிருந்து இந்தோனேசியத் தீவான [[சாவகம் (தீவு)|சாவகத்தை]] கைப்பற்றி [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசை]] விரிவாக்குவதில் பெருபங்காற்றியவரும் ஆவார். தொழில்முறை அல்லாத எழுத்தாளராக ''சாவகத்தின் வரலாறு'' (''தி ஹிஸ்டரி ஆப் ஜாவா'') என்ற நூலை எழுதியுள்ளார்.
==இளமைக்காலம் ==
இராபிள்சு [[ஜமேக்கா]]வின் மோரான்ட் துறைமுகத்தில் கடலில் இருந்த ''ஆன்'' என்ற கப்பலில் கப்பல் தலைவர் பெஞ்சமின் இராபிள்சுக்கும் ஆன் ராபிள்சுக்கும் சூலை 6, 1781இல் பிறந்தார். பெஞ்சமின் இராபிள்சு யார்க்சையரைச் சேர்ந்தவர். அமெரிக்கப் புரட்சியின்போது மேற்கிந்தியத் தீவுகளில் வணிகம் மேற்கொள்ள முற்பட்ட பெஞ்சமினின் முயற்சி தோல்வியடைந்ததால் அக்குடும்பம் வறுமையில் வாடியது. இருப்பினும் குறைந்த வருமானத்திலும் இராபிள்சின் கல்வி தொடர்ந்தது. தங்குபள்ளி ஒன்றில் கல்வி கற்றார். 1795இல், 14 அகவையில், இடாம்போர்டு இலண்டனில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தில்]] அலுவலக உதவியாளராக பணிக்குச் சேர்ந்தார். 1805இல் [[மலேசியா]]வில் தற்போது [[பினாங்கு]] என அறியப்படும் நாட்டிற்கு அனுப்பப் பட்டார். அக்காலத்தில் வேல்சு இளவரசர் தீவு என அழைக்கப்பட்ட அப்பகுதியில் தமது [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] வாழ்க்கையைத் தொடங்கினார். பினாங்கின் ஆளுநர் பிலிப் துண்டாசின் கீழ் பணி புரிந்தார்.
 
==மேற்சான்றுகள்==
29,838

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1975412" இருந்து மீள்விக்கப்பட்டது