சியாங்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 82:
 
இம்மாகாணம் சிறந்த நீர்ப்பாசன வசதியைக் கொண்டுள்ளது. பிரதான பயிர்களாக [[நெல்]], [[கோதுமை]], [[மக்காச்சோளம்]], [[சோளம்]] மற்றும் [[சிறுதானியம்|சிறுதானியங்கள்]] பயிரிடப்படுகின்றன. மேலும் பணப்பயிர்களான [[பருத்தி]], [[நிலக்கடலை]], [[சோயா அவரை]], [[எள்]], [[தேயிலை]] போன்றவையும் விளைவிக்கப்படுகின்றன.
 
==மக்கட் பரம்பல்==
இம்மாகாணத்தில் பெரும்பான்மையாக [[ஹான் சீனர்|ஆன் சீனர்]]கள் வசிக்கின்றனர். மேலும் [[மஞ்சு இனக்குழு]], [[ஊய் மக்கள்|ஊய் இனக்குழு]] போன்றவை சிறுபான்மையினராக உள்ளனர்.
 
==போக்குவரத்து==
நாஞ்சிங் லுக்கோ பன்னாட்டு விமானநிலையம் மாகாணத்தின் பிரதான விமானநிலையம் ஆகும். [[பெய்ஜிங்]]-[[சாங்காய்]] நகரங்களுக்கிடையிலான சிங்கு தொடர்வண்டிச் சேவை இம்மாகாணம் ஊடாகச் செல்கின்றது. நன்கு மேம்பட்ட சாலை வலையமைப்பை சியாங்சு கொண்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சியாங்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது