மீ சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கித்தரவில் சேர்ப்பு, பகுப்பிடல்
வரிசை 1:
 
{{Nowikidatalink}}
{{பகுப்பில்லாதவை}}
{{Infobox Mandir
| name = மீ சன்
வரி 40 ⟶ 39:
}}
}}
'''மீ சன்''' (வியட்நாமிய உச்சரிப்பு: [mǐˀ səːn]) வியட்நாமியம்[[வியட்நாம்]] நாட்டில் உள்ள பண்டையக்கால இந்து கோயில்களின் தொகுதியாகும். இவை, 4 ஆவது முதல் 14 ஆவது நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில் சம்பா அரசர்களால் கட்டப்பட்டவையாகும்.
மீ சன், மத்திய வியட்நாமில் குவாங் நாம் மாகாணம்,டுய் சுயென் மாவட்டம், டுய் பூ கிராமத்திற்கு அருகில் உள்ளது. இரு மலைத்தொடர்களால் சூழப்பட்டு, இரு கிமீ அகலமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் இக்கோயில்கள் உள்ளன.
சம்பா அரசர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகவும், அரச பரம்பரையினர் மற்றும் பெரும் வீர்ர்களின் நினைவிடமாகவும் இருந்துவந்துள்ளது.
சமச்கிருதம் மற்றும் சம் மொழி கல்வெட்டுகள், 70 இக்கும் மேற்பட்டக் கோயில்கள் ஒருகாலத்தில் இங்கு இருந்தன. ஆனால், [[வியட்நாம் போர்|வியட்நாம் போரின்போது]] இவற்றில் பெரும்பாலனவை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] வான்வழித் தாக்குதலில் அழிந்துபோயின.
1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டது.
== வரலாறு ==
70 இக்கும் மேற்பட்ட கோயில்கள், கல்லறைகளைக் கொண்ட மீ சன்னின் காலக்கட்டம், 4 ஆவது முதல் 14 ஆவது நூற்றாண்டு வரை எனக் கருதப்படுகிறது. எனினும், சில இடிபாடுகள் மற்றும் கல்வெட்டுக்கள் நான்காம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவையாக உள்ளன. டோங் டுவாங் நகரை தலைநகராகக் கொண்ட பண்டையக்கால சம்பா அரசின், கலாச்சார மற்றும் சமய புனிதத் தலைநகராக மீ சன் விளங்கியிருக்கூடும்.
=== பத்ரவர்மனும் பத்ரேச்வரரும் ===
[[Image:Linga 1 (My Son).jpg|left|thumb|10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்சிவலிங்கம்]]
மீ சன்னில் கிடைத்துள்ள ஆதாரத்தின்படி பத்ரவர்மன் (380-413), பத்ரவேச்வரன் சிவாலயத்தை அமைத்தார். [[சிவன்]] இங்கு லிங்க வடிவில் உள்ளார். மீ சன் பள்ளத்தாக்கு முழுமையையும் இவ்வாலயத்திற்கு அர்பணிப்பதாக பத்ரவர்மன் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளார்.
சம்புவர்மன்
பத்ரவர்மன் மறைவிற்கு இரு நூறாண்டுகள் கழித்து நெருப்பினால் பத்ரவேச்வரன் சிவாலயம் அழிவுற்றது. ஏழாம் நூற்றாண்டில், அரசர் சம்புவர்மன் (577-629) ஆலயத்தைப் புதுப்பித்து சம்பு-பத்ரவேச்வரன் என்று சிவலிங்கத்தை மறுநிர்மாணம் செய்தார்.
சம்புவர்மன் ஆட்சிக்காலத்தில் கி.பி. 605 இல், சீனத்தளபதி லீய் ஃபாங் சாம் நாட்டின்மீது படையெடுத்தார். சாம் பெரிதும் அழிவுற்றது. ஆனால், திரும்பிச் செல்லும்வழியில் [[கொள்ளை நோய்க்குநோய்]]க்கு லீய் ஃபாங் உட்பட பெரும்பாலோனர் மாண்டனர்
20 ஆம் நூற்றாண்டு ஆய்வாளர்களால் கட்டிடக்கலையின்[[கட்டிடக்கலை]]யின் அற்புதம் என வர்ணிக்கப்பட்ட இவ்வாலயம் வியாட்நாம் போரின்போது அமெரிக்கக் குண்டுவீச்சில் முற்றிலும் அழிந்தது. தற்போது ஒரு செங்கற்குவியலே மிஞ்சியுள்ளது.
=== பிரகாசதர்மன் ===
பிரகாசதர்மன் (653-687), விகராந்தவவர்மன் என்ற பெயரில் அரியணை ஏறினார். தெற்கே அரசை விரிவுபடுத்தினார். சிவலிங்கங்களுக்கு கோசா எனும் உலோகக் கவசங்கள் வழங்கப்பட்டது. இவர் சிவன் மட்டுமல்லாது [[திருமால்|திருமாலையும்]] வழிபட்டார்.
657 இல் இவர் நிறுவிய கல்வெட்டின் மூலம் சம்பா அரசர்களின் வம்ச மரபை அறிய முடிகிறது.
=== பிற்காலம் ===
வரி 76 ⟶ 75:
* [http://mysonsanctuary.com/ மீ சன் சுற்றுலா]
 
[[பகுப்பு:வியட்நாமில் உள்ள இந்துக் கோயில்கள்‎]]
[[பகுப்பு:வியட்நாமில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்‎]]
[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]]
"https://ta.wikipedia.org/wiki/மீ_சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது