நாலடியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
== எடுத்துக்காட்டு பாடல்கள் ==
:குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
:மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
:நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
:கல்வி அழகே அழகு.
<p align=right>(2. பொருட்பால், 2.14 கல்வி, 131)
 
தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனத்தளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.
 
:இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
:தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
:எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
:மம்மர் அறுக்கும் மருந்து. (
<p align=right>2. பொருட்பால், 2.14 கல்வி, 132)
 
கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/நாலடியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது