காருக்குறிச்சி அருணாசலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தவில்காரர்
சி இசைக்கலைஞர்
வரிசை 1:
<nowiki>'''காருகுறிச்சி அருணாசலம்'''
 
தமிழகத்தில் அண்மைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றவர் விளங்கிய நாகசுரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம் ஆவார்.
வரி 15 ⟶ 14:
அருணாசலம் அவர்கள் சுத்துமல்லி சுப்பையா கம்பர் என்பவரிடம் நாகசுரமும், களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் பயிலத் தொடங்கினார். கற்றபின் சிறிய சிறிய கச்சேரி வாய்ப்புகள் வந்தபோதும், கலைமேல் உள்ள விருப்பத்தால் இன்னும் அதிகம் கற்க விரும்பினார். தஞ்சை மண்ணில் பிறந்த நாகசுரக் கலைஞரிடம் கற்றால்தான் இன்னும் கலை மெருகேறும் என்று பலவேசம் நினைத்தார். அதன்படி திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளையிடம் சேர்க்கச் சென்றார்.
 
'''திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளையிடம் சீடனாகுதல்'''
 
திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளையிடம் தன் பிள்ளையைச் சீடானக்குவது எப்படி? யார் அவனை அழைத்துச் செல்வார்கள் ? என்றெல்லாம் பலவேசம் சிந்தனை செய்தார். இதற்கிடையில், காருகுறிச்சியில் உள்ள கு.எ. பண்ணையில் நாகசுரம் வாசிக்க வந்திருந்தார் திருவாவடுதுறையார். அவருடன் வாசிக்கவந்த “காக்காயி” நடராச சுந்தரத்திற்கு உடல்நிலை சரியில்லாமல்போகவே, துணைக்கு யாராவது ஒரு சிறு பிள்ளை வேண்டும் என்றார் திருவாவடுதுறையார். மணிசர்மா என்பவர் உடனே சென்று அருணாசலத்தை அழைத்துவந்து அறிமுகப்படுத்தினார். பையனின் திறமையைக்கண்ட ராசரத்தினம்பிள்ளை, தன்னுடனே இருக்கட்டும் என்று கூறினார். பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகவிட்டது. அன்று முதல், காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுறை ராசரத்தினம்பிள்ளையின் சீடரானார்.
வரி 38 ⟶ 37:
 
கோவில்பட்டியில் உள்ள தன் இல்லத்தில், 08.04.1964 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
</nowiki>
"https://ta.wikipedia.org/wiki/காருக்குறிச்சி_அருணாசலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது