பன்னாட்டுத் தேயிலை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1:
'''பன்னாட்டுத் தேயிலை நாள்''' (''International Tea Day'') 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் டிசம்பர் 15 ஆம் நாள்<ref name=Teafarm.ca>{{cite web|title=International tea day 2013|url=http://www.teafarm.ca/events/international-tea-day-2013/}}</ref> [[தேயிலை]] உற்பத்தி செய்யப்படும் [[வங்காளதேசம்]], [[இலங்கை]], [[நேபாளம்]], [[வியட்நாம்]], [[இந்தோனேசியா]], [[கென்யா]], [[மலாவி]], [[மலேசியா]], [[உகாண்டா]], [[இந்தியா]], மற்றும் [[தன்சானியா]] உட்படப் பல நாடுகளில் நினைவு கூரப்பட்டு வருகிறது.<ref name=Gol27.com>{{cite web|title=History of Tea : International Tea Day|url=http://www.gol27.com/HistoryTeaDay.html}}</ref> தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர், மற்றும் தேயிலையைப் பயன்படுத்துபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கக்களுக்கும், குடிமக்களுக்கும் கொண்டு செல்வதே இந்நாளின் முக்கிய நோக்கம் ஆகும். முதலாவது பன்னாட்டுத் தேயிலை நாள் 2005 டிசம்பர் 15 இல் [[புது தில்லி]] நடைபெற்றது. இரண்டாவது பன்னாட்டு நாள் 2006 இடிசம்பர் 15 இல் [[இலங்கை]]யில் [[கண்டி]] நகரில் நடைபெற்றது.<ref name="Virakesari">{{cite news | title=சர்வதேச தேயிலை தினத்தின் பின்புலம் | publisher=[[வீரகேசரி (நாளிதழ்)|வீரகேசரி]] | date=13 டிசம்பர் 2015 | accessdate=13 திசம்பர் 2015 | author=பெ. முத்துலிங்கம்}}</ref> பன்னாட்டுத் தேயிலை நாள் கொண்டாட்டங்கள் ஊடாக நடைபெறும் பன்னாட்டு மாநாடுகள் தேயிலைத் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்க]] இயக்கங்கள் முன்னெடுக்கின்றன.
 
==பின்னணி==
2001 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் அரசு சார்பற்ற அமைப்புகள், மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து உலக சமூக மாமன்ற மாநாட்டை [[பிரேசில்|பிரேசிலில்]] நடத்தின.<ref name="Virakesari"/> இதன் விளைவாக 2003 இல் உலக சமூக மாமன்றத்தின் ஆசிய மாநாடு [[இந்தியா]]வில் [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாது]] நகரில் நடைபெற்றது.<ref name="Virakesari"/> இம்மாநாட்டில் இலங்கை, இந்தியத் தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன் போது, 2004 ஆம் ஆண்டு [[மும்பை]] மாநாட்டில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக தனியான மாநாடு ஒன்று நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. 2004 மும்பை மாநாட்டில் பன்னாட்டுத் தேயிலைத் தொழிலாளர்களின் பிரச்சினை ஏனைய தொழிற்துறை சார்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளில் இருந்து வேறுபட்டது என அடையாளம் காணப்பட்டது.<ref name="Virakesari"/> இவர்களது பிரச்சினைகளை வெளிப்படுத்த தனித்துவமான தினத்தின் அவசியம் குறித்து உடன்பாடு எட்டப்பட்டது. [[பிரித்தானியா]]வின் முதலாவது இந்திய [[அசாம்]] தேயிலைத் தோட்டத்தில் [[சீனா|சீன]] ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பர் 15 இல் மேற்கொண்ட முதலாவது சம்பளப் போராட்டத்தின் நினைவாக ஆண்டு தோறும் டிசம்பர் 15 இல் இந்நாளைக் கொண்டாடுவதென 2005 ஆம் ஆண்டில் பிரேசிலில் நடந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.<ref name="Virakesari"/>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references />
 
== வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டுத்_தேயிலை_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது