டானியல் கிர்க்வுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
 
==வானியற்பணிகள்==
 
இவரது கணிசமான பங்களிப்புகள் சிறுகோள்கள் வட்டணை ஆய்வுவழி கிடைத்தனவாகும். அவர்காலத்தில் வேகமாகக் கண்டுபிடிக்கப்பட்டுவந்த சிறுகோள்களை அவை சூரியனில் இருந்து அமையும் தொலைவுப்படி வரிசைப்படுத்தி, அவற்றின் இடையே பல இடைவெளிகள் அமைவதைச் சுட்டிக் கட்டினார்’<ref name="Kirkwood1866">Kirkwood, Daniel (1866). "On the Theory of Meteors" in ''Proceedings of American Association for the Advancement of Science for 1866'', pp.8-14.</ref> இந்த இடைவெளிகள் இப்போது கிர்க்வுட் சந்துகள் என அழைக்கப்படுகின்றன. இந்தச் சந்துகளின் உருவாக்கத்தை இவர் வியாழன் வட்டணையின் ஒத்திசைவுகளுடன் உறவுபடுத்தினார். மேலும் இவர் காரிக்கோள் நிலாக்கள் சுற்றிவரும் வட்டணைகளின் ஒத்திசைவுகளின் விளைவால்தான் காரிக்கோள் வலயங்களின் காசினிப் பிரிவினை (காசினிச் சந்து) ஏற்படுவதாகவும் முன்மொழிந்தார். இவரே முதன்முதலாக வால்வெள்ளிகளில் இருந்து பிரிந்த சிதிலங்களே விண்கற்களாகப் பொழிகின்றன எனவும் திட்டவட்டமாகக் கூறினார்.
 
இவர் கோள்களின் தொலைவுக்கும் அவற்றின் சுழற்சி காலத்துக்கும் இடையில் உள்ள உறவை இனங்கண்டார். இது கிர்க்வுட் விதி எனப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு வானியலாளர்களிடையே இவருக்குப் பன்னாட்டுப் புகழை ஈட்டித் தந்தது. சியர்சு கூக் வாக்கர் இவரை அமெரிக்க கெப்ளர் எனப் புகழ்ந்தார். மேலும் இவ்விதி மிகப் பரவலாக ஏற்கப்பட்ட சூரிய ஒண்முகில் கோட்பாட்டையும் நிறுவியது எனப் போற்றினார். பின்னர் கோள்சுழற்சிக் கால அளவைகள் இவ்வுறவைப் பொய்ப்பித்த்தால் இவ்விதி வழக்கிழந்தது.
 
==இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/டானியல்_கிர்க்வுட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது