"பயனர்:தினேஷ்குமார்/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
தனது இளமைக் காலத்தில் தான் செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் தேடிய மிலரெபா, மார்ப்பாவிடம் சீடராக சேர்ந்தார். மார்ப்பா மிகவும் கடுமையான ஆசிரியராக விளங்கினார். அவருக்கு கற்பிக்கத் துவங்கும் முன், மிலரெபாவை மூன்று முறை ஒரு தூணை எழுப்பச் சொல்லியும் பின்னர் அதை தகர்க்கவும் ஆணையிட்டார். பின்னர் இறுதியாக, மிலரெபாவை பல அடுக்குக் கட்டடம் ஒன்றை கட்டப் பணித்தார். 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த அந்த கட்டடம் இன்றும் இருக்கிறது. துவக்கத்தில் மிலரெபாவை பயிற்றுவிக்க மார்ப்பா மறுத்தபோது, அவர் மீது இறக்கம் கொண்ட மார்ப்பாவின் மனைவி, மற்றொரு துறவியான லாமா கோக்துன் சுதோர் என்பவருக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தனுப்பினார். அவரிடம் தியானம் கற்றார் மிலரெபா. ஆனால், முன்னேற்றம் இல்லாததைக் கண்டு, தன்னை மார்ப்பா நிராகரித்ததை மிலரெபா ஒப்புக்கொண்டார். அப்போது கோக்துன் சுதோர், மார்ப்பாவின் ஆசிர்வாதம் இல்லாம்ல் செய்யப்படும் பயிற்சி வீணே என்று அறிவுரை வழங்கினார்.
 
இதற்கு பிறகு மீண்டும் மார்ப்பாவிடம் திரும்பி அவரை தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைத்தார் மிலரெபா. பயிற்சிக்கு பின் மார்ப்பாவிடமிருந்து விடைபெற்ற மிலரெபா தனது விடாமுயற்சியால் 12 வருடங்கள் கழித்து ஞானம் அடைந்தார். அதற்கு முன் "மிலா தோபகா" என்றழைக்கப்பட்ட அவர், அதன் பின்னரே மிலரெபா என்றழைக்கப் பட்டார். "மில" என்ற திபெத்திய சொல்லுக்கு மாமனிதர் என்று பொருள்; "ரெபா" என்றால் பருத்தி ஆடை உடுத்தியவர் என்று அர்த்தம். தனது 45 வயதுக்குப் பின் ''த்ரகர் டாசோ'' என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். அவ்விடம் தற்போது ''மிலரெபா குகை'' என்று வழங்கப்படுகிறது.
376

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1984139" இருந்து மீள்விக்கப்பட்டது