"ரோசுமேரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,332 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{taxobox
|name = ''ரோசு மேரி''
|image = Rosemary bush.jpg
}}</ref>
|}}
'''ரோசு மேரி''' (ரோஸ் மேரி; ''Rosmarinus officinalis'') என்பது தடித்த வாசம்மிகு [[பச்சையம்|பசுமை மாறா]], [[தையல் ஊசி|ஊசி]] போன்ற [[இலை|இலைகளைக்]]களைக் கொண்ட [[பல்லாண்டுத் தாவரம்|பல்லாண்டு வாழக்கூடிய]] ஒரு [[மூலிகை]]த் தாவரமாகும். மத்தியத் தரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இது ஈயெச்சக் கீரையின் (புதினா) குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் மேலும் பல மூலிகைகளும் உள்ளன.
 
ரோசு மேரி எனும் பெயரானது இலத்தீன் மொழிப் பெயரான ரோஸ்மாரினஸ் என்பதிலிருந்துத் தருவிக்கப்பட்டதாகும். இதற்கு ''கடல் துளி'' என்று பொருள்.<ref>{{cite book|last=Room|first=Adrian|title=A Dictionary of True Etymologies|page=150|publisher=Taylor & Francis|year=1988|isbn=9780415030601978-0-415-03060-1|url=http://books.google.com/?id=kZIOAAAAQAAJ&pg=PA150}}</ref> (marinus - கடல்; ros - துளி) பல இடங்களில் இத்தாவரமானது நீரை விடுத்துக் கடல் காற்றின் ஈரப்பதத்தையே உயிர்வாழ எடுத்துக் கொள்கிறது. எனவே இப்பெயர் ஏற்பட்டது.
 
== வகைப்பாட்டியல் ==
ரோசுமேரினஸ் என்ற பேரினத்திலுள்ள இரு சிற்றினங்களுள் ரோஸ்மேரினஸ் அஃபிசினாலிஸ் ஒன்றாகும். மற்றொரு சிற்றினம் ஆனது ரோஸ்மேரினஸ் எரியோகலிக்ஸ் ஆகும். இது ஆஃப்ரிக்காவின் வட பகுதியிலும் (மாக்ரெப்) ஐபீரியாவிலும் மட்டுமே இருக்கிறது. இம்மூலிகை ஆனது மிகப்பெரிய புதினா குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது.
 
இத்தாவரம் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இயற்கையாளரான கரோலசு லின்னேயசால் பெயரிடப்பட்டது. அதன் பிறகு இதன் வகைப்பாட்டியலில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை.
 
== விளக்கம் ==
தண்டுகள் மேல்நோக்கியோ சாய்வாகவோ வளரக்கூடியவை. மேல்நோக்கிய தண்டுகள் 1.5 மீ (5 அடி) என்ற உயரத்திற்கு வளரத்தக்கவை. அரிதாக 2 மீ (6 அடி 7 இன்ச்) என்ற அளவிலும் இருக்கும்.
 
ரோசு மேரி ஆனது வட பகுதிகளில் கோடையிலும் மற்றபடி மிதமான குளிர் நிலவும் பகுதிகளில் பல்வேறு நிறங்களில் எப்போதும் பூத்தபடி இருக்கும். இதன் பூக்கள் வெண்மை, இளஞ்சிவப்பு, ஊதா, நீலம் போன்ற நிறங்களை உடையவையாக இருக்கும்.<ref>http://www.bhg.com/gardening/plant-dictionary/herb/rosemary/</ref>
 
== புராணம் ==
''கடல் துளி'' என்று மொழிபெயர்க்கப்படும் ''ரோஸ் மேரினஸ்'' என்ற சொல்லானது இலத்தீன் சொற்களிலிருந்து வருகிறது. உண்மையில் ஔரானாசின் விந்திலிருந்துப் பிறந்த [[அப்ரடைட்டி|அப்ரோடைட்]] ஆனவள் கடலிலிருந்து எழும்போது ரோசு மேரியையே உடுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று அப்ரோடைட் கடவுள் ஆனது ரோசு மேரியுடன் [[கன்னி மேரி|கன்னி மேரியைப்]]யைப் போன்றே தொடர்புபடுத்தப்படுகிறது. கன்னி மேரி ஆனவள் ஓய்வெடுக்கையிலே ஆடை மீது வெண்ணிற ரோசுமேரி மலர்களை மாலையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அந்நிறமானது மேரியுடன் தொடர்புடையதானதாகக் கூறப்படுகிறது.
 
== பயிரிடல் ==
இப்பயிரானது வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. இது தோட்டங்களிலும் அழகுத் தாவரமாகப் பயன்படுகிறது. அது தவிர பூச்சிக் கொல்லியாகவும் இது பயன்படுகிறது. இப்பயிரானது தண்ணீர் தேங்கக் கூடிய இடங்களில் வளருவதில்லை. இப்பயிர் வளர நல்ல நீரோட்ட வசதி இருக்க வேண்டும். மேலும் மண்ணின் [[PH எண்|pH]] மதிப்பானது 7-7.8 வரை இருக்க வேண்டும்.
 
* ''வில்மாஸ் கோல்டு'' – மஞ்சள் இலைகள்
 
== மருத்துவப் பயன்பாடுகள் ==
ரோசுமேரியில் காணப்படும் கார்னோசிக் அமிலமானது அல்கெய்மர், லு கெரிக் போன்ற மூளை சம்மந்தப்பட்ட நரம்பியல் நோய்களைத் தடுக்கக் கூடியது என்று அறியப்பட்டுள்ளது.<ref>Burnham Institute for Medical Research (2007, Novemberநவம்பர் 2). Rosemary Chicken Protects Your Brain From Free Radicals. ScienceDaily. Retrieved Novemberநவம்பர் 2, 2007, from http://www.sciencedaily.com­&shy;/releases/2007/10/071030102210.htm and http://www.medspice.com/content/view/119/69/</ref>
 
ரோசுமேரியின் பொடியானது புற்றூக்கிகளுக்கு<ref name="விக்சனரி">[http://ta.wiktionary.org/wiki/carcinogen புற்றூக்கி குறித்து விக்சனரி]</ref> எதிராகச் செயல்படுகிறது. இது எலிக்குக் கொடுக்கப்பட்டுச் சோதித்தறியப்பட்டுள்ளது.<ref> {{cite book | author = Teuscher E | year = 2005 | title = Medicinal Spices (1 ed.) | location = Stuttgart | publisher = Medpharm }}</ref>
 
இது ரோசுமேரினிக் அமிலம் போன்ற எதிர் ஆக்சிசனேற்றிகளையும் கொண்டுள்ளது. மேலும் இதில் கற்பூரமும் (உலர் இலைகளில் 20% வரை), [[கேஃபேயிக் அமிலம்]], [[உர்சாயிக் அமிலம்]], [[பிட்யூலினிக் அமிலம்]], [[ரோசுமாரிடிஃபீனால்]], [[ரோசுமனால்]] போன்றவையும் உள்ளன.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
==படக்காட்சியகம்==
<gallery widths="180px" heights="180px" perrow="4">
Image:Rosemary white bg.jpg|ரோசுமேரி கிளை
Image:ChristianBauer flowering rosemary.jpg|ரோசுமேரி மலர்கள்
Image:Rosemary.jpg|பூக்கும் ரோசுமேரி புதர்
Image:Rosemary 'Irene' leaves.jpg|இலைகள்: வெண்ணிறப் பகுதி அடிப்பகுதியாகும்
Image:Rosemary 'Irene'.jpg|பயிரிடத்தகு ஐரீன் (Irene)
Image:Rosmarinus officinalis.jpg|லாங் வுட் தோட்டத்திலுள்ள ரோசுமேரி புதர்
Image:Koeh-258.jpg|கோய்லெரின் மருத்துவத் தாவரங்களிலிருந்து, 1887
Image:RoseMaryCLoseUp.jpg|மலரின் தோற்றன்
Image:Large_rosemary_bush.jpg|மிகப்பெரிய ரோசுமேரி தாவரம்
Image:Rosemarymacro.jpg|டிட்டுஸ்வில்லேயிலுள்ள ஒரு ரோசுமேரி மாதிரி
Image:Rosemary potatoes.jpg|ரோசுமேரி கிழங்குகள்
Image:RosmaryStem_SatCrop_BgSub.jpg|15 ஆண்டுகள் வயதான ஒரு ரோசுமேரி தாவரத் தண்டு
Image:Rosemary001.jpg|நிலாமுற்றத்தில் வைக்கப்பட்டுள்ள ரோசுமேரி
Image:Romarin.jpg|வளர்க்கப்பட்டு வரும் ஒரு ரோசுமேரி தாவரம்
படிமம்:Rosmarinus officinalis133095382.jpg|மலருடன் கூடிய ரோசுமேரி தாவரம்
படிமம்:Rosmarinus_officinalis_0003.JPG|மலர்களுடன் கூடிய ரோசுமேரியின் அண்மைத் தோற்றம்
File:Rosmarinus officinalis MHNT.BOT.2008.1.19.jpg|Rosmarinus officinalis - Museum specimen
</gallery>
 
==இவற்றையும் பார்க்கவும்==
*[[மூலிகை]]
*[[மூலிகைகள் பட்டியல் (வரைவு)|மூலிகைகள் பட்டியல்-1]]
*[[மூலிகைகள் பட்டியல்|மூலிகைகள் பட்டியல்-2]]
*[[மூலிகை மருத்துவம்]]
*[[மூலிகைத் தோட்டம்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:தாவரங்கள்]]
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1986589" இருந்து மீள்விக்கப்பட்டது