நகர்ப்புறச் சூழல் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''நகர்ப்புறச் சூழ்நிலைமண்டலங்கள்''' (Urban ecosystems) என்பன மனிதனால் அமைக்கப்பட்...
 
No edit summary
வரிசை 1:
'''நகர்ப்புறச் சூழ்நிலைமண்டலங்கள்''' (Urban ecosystems) என்பன மனிதனால் அமைக்கப்பட்ட [[நகரம்|நகரங்கள்]], [[பெருநகரம்|பெருநகரங்கள்]] போன்றனவாகும். நகப்புற மக்கள்தொகையினதும், உட்கட்டுமானங்களினதும் வளர்ச்சிகள், நகர்ப்புறச் சூழலை மட்டுமன்றி அவற்றைச் சூழவுள்ள பகுதிகள் மீதும் தாக்கத்தை உண்டாக்குகின்றன. இப் பகுதிகள், [[குறை நகர்ப்புறம்|குறை நகர்ப்புறச்]] சூழல்கள், [[விளிம்பு நகரம்|விளிம்பு நகரங்கள்]], [[வேளாண்மை]]ப் பகுதிகள் மற்றும் இயற்கை [[நிலத்தோற்றம்|நிலத்தோற்றப்]] பகுதிகள் என்பனவற்றை உள்ளடக்குகின்றன.
 
 
மனித மற்றும் சூழற் சுகாதாரத்தின் மீது [[நகராக்கம்|நகராக்கத்தின்]] தாக்கங்களை அளவிடுவதற்கான வழிமுறைகள் பற்றி அறிவியலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
 
நகர்ப்புறங்களைப் பரந்த சூழ்நிலை மண்டலத்தின் ஒரு பகுதியாகக் கொள்வதன்மூலம் நகர்ப்புற நிலத்தோற்றம் எவ்வாறு செயற்படுகின்றது என்றும், அவற்றோடு தொடர்பு கொண்டுள்ள பிற நிலத்தோற்றங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்றும் ஆராய முடியும். நகர்ப்புறங்கள் பிற பகுதிகள் மீது தாக்கம் உண்டாக்குவது மட்டுமன்றி, அப்பிற பகுதிகளினால் தாக்கத்துக்கும் உள்ளாகின்றன. இவற்றை ஆராய்வதன் மூலம், எவ்வகையான வளர்ச்சிகள் மிகச் சிறந்த சூழல்களை உருவாக்கக் கூடும் என்று அறிய முடியும்.
 
 
 
[[பகுப்பு:சூழலியல்]]
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/நகர்ப்புறச்_சூழல்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது