"நாதசுவரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

152 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி (*விரிவாக்கம்*)
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய [[கோயில்|கோயில்களில்]] அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் [[திருமணம்]], பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.<ref>[http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513335.htm மங்கல இசை]</ref>
 
இவ்[[வாத்தியம்]] முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த [[நாகர்]] என்ற சாதியரினால் வாசிக்கப்பட்டு வந்தது. [[நாகம் (பாம்பு)|நாகத்தின்]] போன்று உருவத்தைப் போன்று நீண்டிருந்த்ததின்நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான [[நாதம்]] காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது.
 
==தோற்றம்==
 
நாதசுவரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் [[வங்கியம்]] என்னும் இசைக்கருவியுடன் இதனைத் தொடர்புபடுத்தச் சிலர் முயன்ற போதிலும் அது [[புல்லாங்குழல்]] போன்ற ஒரு கருவியே என்று பலர் கருதுகிறார்கள். இசைக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற கல்வெட்டுக்களிலும் இது பற்றிய குறிப்புக்களோ அல்லது அதனோடு தொடர்புடைய இசைக் கலைஞர் பற்றிய குறிப்புக்களோ இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன் இதன் துணை இசைக்கருவியாக விளங்குகின்ற தவிலும் கூட இத் தகவல் மூலங்கள் எதிலும் காணக் கிடைக்கவில்லை.
 
 
====ஒத்து====
 
நாதசுரத்திற்கு [[சுருதி]] கருவியாக விளங்குவது ''ஒத்து'' என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக [[சுருதிப்பெட்டி]] பயன்படுத்தப்படுகின்றது.
 
====பெரியமேளம்====
 
நாதசுவரத்துக்கு தாளக் கருவியாக அமைவது [[தவில்]] (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும். இதனால் நாதசுவர இசைக்கலைஞர்கள் பொதுவாகத் தவில் இசைக் கலைஞருடன் சேர்ந்து குழுக்களாகவே செயல்படுவது வழக்கம். நாதசுவரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் ''பெரியமேளம்'' என அழைப்பர்<ref name="Percussioner International Audio Magazine">{{cite book|title=Percussioner International Audio Magazine|url=http://books.google.com/books?id=BskJAQAAMAAJ|accessdate=25 December 2012|year=1984|publisher=Sal Sofia Industries, Inc.|page=38}}</ref><ref name="Percussioner International Audio Magazine">{{cite book|title=Percussioner International Audio Magazine|url=http://books.google.com/books?id=BskJAQAAMAAJ|accessdate=25 December 2012|year=1984|publisher=Sal Sofia Industries, Inc.|page=38}}</ref>.
 
==கட்டுமானம்==
 
நாதசுவரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படும். இம்மரமும் வெட்டப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகே இக்கருவி செய்யப் பயன்படும். இதனால் பழைமையான வீடுகளில் கட்டடமாக இருந்து, பிரிக்கப்பட்ட பொழுது இம்மரத்தை வாங்கி வந்து, இக்கருவியைச் செய்வர். இக்கருவியின் மேல் பகுதியை உளவு என்றும், கீழ்ப்பகுதியை அணசு என்றும் கூறுவர். உளவுப் பகுதியில் 12 துளைகள் அமைக்கப்படும். இக்கருவியின் அளவிற்கேற்ப, முகவீணை, திமிரி நாயனம், பாரி நாயனம், இடைப்பாரி நாயனம், மத்திம சுருதி நாயனம் என்ற பெயர்களுடன் வழங்கி வருகின்றனர். நாதசுவரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும். இது ஒரு வகை [[நாணல்]] என்ற புல் வகையால் செய்யப்படும். இந்த [[நாணல்|நாணலைக்]] ‘கொறுக்கைத் தட்டை’ என்பர். இதனை ஆற்றங்கரையிலிருந்து கொண்டு வந்து பக்குவப்படுத்துவர். இச்சீவாளியையும் நாதசுவரத்தையும் இணைக்கும் கெண்டை என்ற பகுதி சீவாளியோடு இணைக்கப்பட்டிருக்கும்.
 
 
==பயன்பாடு==
நாதசுவரம் மங்கல இசைக்கருவியாக பயன்படுகிறது. கோவில்கள் சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்த ஏற்ற இசைக்கருவியாகும். நாதசுவரங்கள் உட்புற நிகழ்ச்சிகளை விட திறந்த வெளிகளில் பயன்படுத்த மிகவும் ஏற்றதாகும். ஏனெனில் இவற்றின் இசை பெருக்கும் திறன் அதிகமாகும்.
 
==இதனையும் காண்க==
 
==வெளி இணைப்புகள்==
 
* [http://balhanuman.wordpress.com/2011/02/06/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/ நாதசுரம் பற்றி பாரதி மணியின் கட்டுரை]
* [http://www.thehindu.com/features/friday-review/music/the-neglected-nagaswaram/article5425336.ece நாதசுவர இசையின் இன்றைய நிலை குறித்த ஒரு கட்டுரை]
* [http://www.bbc.com/tamil/india/2015/09/150913_nagaswaramseries1 மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் முதல் பகுதி]
* [http://www.bbc.com/tamil/arts_and_culture/nagaswaramseries ''மறைந்து வரும் மங்கல இசை'']
* [http://www.thehindu.com/news/cities/chennai/ancient-sounds-of-temple-music-fade/article5487577.ece Ancient sounds of temple music fade]
* [http://www.hindu.com/yw/2003/04/05/stories/2003040501020300.htm Auspicious instruments]
* [http://www.dinamani.com/latest_news/2013/10/12/ஸ்ரீநடராஜர்-கோயிலில்-நாதனு/article1833034.ece ஸ்ரீநடராஜர் கோயிலில் "நாதனும், நாதமும்" வீடியோ குறுந்தகடு வெளியீடு!]
* [http://www.thehindu.com/features/magazine/narasingapettais-nadaswaram-makers/article7088894.ece Nadaswaram makers]
* [http://www.thehindu.com/features/friday-review/what-adds-melody-to-the-reed/article8025711.ece?secpage=true&secname=entertainment What adds melody to the reed?]
* [http://www.bbc.com/tamil/arts_and_culture/nagaswaramseries ''மறைந்து வரும் மங்கல இசை'']
 
{{தமிழிசைக் கருவிகள்}}
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1987433" இருந்து மீள்விக்கப்பட்டது