குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Z
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''குடியரசு''' என்பது, [[வாரிசு உரிமை]] கொண்ட [[முடியாட்சி|மன்னராட்சி]] இல்லாததும், அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு [[நாடு|நாட்டைக்]] குறிக்கும். குடியரசு ஒன்றின் ஒழுங்கமைப்பு பல வகைகளில் வேறுபடக்கூடும். குடியரசுத் தலைவருக்கு விதிக்கப் [[கடமை]]களைப் பொறுத்தும், மரபுகளை ஒட்டியும், அப்பதவி வெறுமனே ஒரு அரசியல் சாராத சடங்கு சார்ந்த பதவியாகவோ, அல்லது பெரும் செல்வாக்குள்ளதும், பெருமளவு அரசியல் சார்ந்ததுமாகவோ இருக்கக்கூடும்.
 
== குடியரசுகளின் இயல்புகள் ==
=== குடியரசின் தலைவர் ===
தற்காலக் குடியரசுகளில் அதன் [[தலைவர்]] [[குடியரசுத் தலைவர்]] அல்லது சனாதிபதி எனப்படுவார். மக்களாட்சி முறை பின்பற்றப்படும் குடியரசுகளில், குடியரசுத் தலைவர் [[தேர்தல்]] மூலம் தேர்வு செய்யப்படுவார். சில குடியரசுகளில் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார். [[ஐக்கிய அமெரிக்கா]], [[இலங்கை]] ஆகிய நாடுகளில் இந்த முறை உள்ளது. சில நாடுகளில் குடியரசுத் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படாமல், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அவைகளால் தேர்வு செய்யப்படுவது வழக்கம். [[இந்தியா]]வில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இத்தகைய முறைகள் உள்ள குடியரசுகளில் குடியரசுத் தலைவரின் [[பதவிக் காலம்]] நான்கு தொடக்கம் ஆறு ஆண்டுகள் வரை வேறுபடலாம். இவ்வாறான குடியரசுகள் சிலவற்றின் [[அரசியல் சட்டம்|அரசியல் சட்டங்கள்]], ஒருவர் குறிப்பிட்ட எண்ணிக்கையான தடவைகளுக்கு மேல் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்படக்கூடாது என விதிப்பதும் உண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது