55,785
தொகுப்புகள்
(Added {{unreferenced}} tag to article (TW)) |
|||
{{unreferenced|date=திசம்பர் 2015}}
[[படிமம்:World Monarchies.png|300px|thumb|right|{{legend|#007f00|[[அரசியல்சட்ட முடியாட்சி]]}}{{legend|#00ff00|[[பொதுநலவாய நாடுகள்]]|border=#0d0}}{{legend|#ff7f40|குறைநிலை அரசியல்சட்ட முடியாட்சி}}{{legend|#ff0000|[[முழுமையான முடியாட்சி]]}}{{legend|#ff00ff|துணைத்தேசிய முடியாட்சி (பகுதிப் பட்டியல்)}}]]
'''முடியாட்சி''' என்பது, அரசின் ஒரு வடிவம் ஆகும். இதில், அதியுயர் அதிகாரம் முழுமையாகவோ அல்லது பெயரளவுக்கோ ஒரு தனிப்பட்டவரிடம் இருக்கும். இவரே அரசின் தலைவராவார். இப்பதவியை அவர் தனது [[வாழ்நாள்]] முழுவதும் அல்லது அதிலிருந்து விலகும் வரை வகிப்பார். அத்துடன் இவர் நாட்டு மக்களிலும் வேறான தனி உரிமைகளைக் கொண்டிருப்பார். இந்த அரசுத் தலைவர் [[மன்னர்]], அரசர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுவார்.
முடியாட்சி என்பதற்குத் தெளிவான வரைவிலக்கணம் கிடையாது. [[ஐக்கிய இராச்சியம்]], [[தாய்லாந்து]] போன்ற நாடுகளில் உள்ள [[அரசியல்சட்ட முடியாட்சி]]களில் அரசுத் தலைவருக்கு முழுமையான அதிகாரம் கிடையாது. இதனால், எல்லையற்ற அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருத்தல் என்பதை முடியாட்சியை வரையறுக்கும் ஒரு இயல்பாகக் கொள்ள முடியாது. [[தலைமுறை ஆட்சி]] ஒரு பொது இயல்பாக இருப்பினும், தேர்வு முடியாட்சிகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக [[வத்திக்கான்|வத்திக்கானின்]] அரசராகக் கருதப்படும் [[திருத்தந்தை]]யை [[கர்தினால்]]கள் தேர்வு செய்கின்றனர். சில நாடுகளில் தலைமுறை அரசுரிமை இருந்தாலும் அவை குடியரசாகக் கொள்ளப்படுகின்றன.
தற்சமயம் உலகில் 44 [[நாடு]]கள் முடியாட்சி முறையைக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் 16 நாடுகள் [[பொதுநலவாய நாடுகள்]] குழுவைச் சேர்ந்தவை. இவை ஐக்கிய இராச்சியத்தின் அரசர் அல்லது அரசியைத் தமது அரசுத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளன.
== முடியாட்சி முறைமையின் குறைகள் ==
முதன்மைக் கட்டுரை: ''[[முடியாட்சி முறைமையின் குறைகள்]]''
{{அரசாட்சி முறைமைகள்}}
[[பகுப்பு:முடியாட்சிகள்]]
|