நாட்டுத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 64 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''நாட்டுத் தலைவர்''' (''Head of state'') ஒரு இறையாண்மையுள்ள நாட்டின் மிக உயர்ந்த அரசு பதவி வகிப்பவரைக் குறிக்க பயன்படுத்தப்படும் பெயராகும். அரசமைப்புச் சட்டவியல், பன்னாட்டு சட்டவியல், [[அரசறிவியல்]], தூதரக நெறிமுறைகள் போன்ற துறைகளில் இத்தொடர் பயன்படுகிறது. இப்பதவி வகிப்பவர் பன்னாட்டு அரங்கில் அந்நாட்டின் தலைமைப் பொது பிரதிநியாகச் செயல்படும் அதிகாரம் பெற்றிருப்பார். உலகின் மிகப்பெரும்பான்மையான நாடுகளில் இப்பதவியை தனியொருவரே வகிக்கின்றார் எனினும் [[சுவிட்சர்லாந்து]], [[பொசுனியா எர்செகோவினா]], [[அண்டோரா]], [[சான் மரீனோ]] ஆகிய நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர் கொண்ட குழுமங்கள் இப்பதவியை வகிக்கின்றன. [[ஐக்கிய நாடுகள்]] போன்ற பன்னாட்டு அவைகளிலும் பன்னாட்டு உடன்படிக்கைகளிலும் “நாட்டுத் தலைவர்” என்னும் பதவி [[அரசுத் தலைவர்]] (''Head of government'') பதவியிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. பல நாடுகளில் அரசுத் தலைவரும் நாட்டுத் தலைவரும் இரு வேறு நபர்களாக இருப்பர். எடுத்துக்காட்டாக [[நாடாளுமன்ற முறை|நாடாளுமன்ற மக்களாட்சி முறைமைகளில்]] நாட்டுத் தலைவர் அரசராகவோ ([[ஐக்கிய இராச்சியம்]]) அல்லது [[குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவராகவோ]] ([[இந்தியா]]) இருப்பார். நாட்டின் [[பிரதமர்|பிரதம அமைச்சர்]] அரசுத் தலைவராக இருப்பார். வேறு சில நாடுகளில் அரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் செயல்படுகிறார். எடுத்துக்காட்டாக [[ஐக்கிய அமெரிக்கா]], [[பிரேசில்]], [[இலங்கை]] போன்ற குடியரசுத் தலைவர் மக்களாட்சி முறைமைகளில் [[குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரே]] நாட்டுத் தலைவராகவும் அரசுத் தலைவராகவும் செயல்படுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/நாட்டுத்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது