ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
== வாழ்க்கைக் குறிப்பு ==
=== இளமை, கல்லூரி ===
ஐன்ஸ்டைன் [[ஜெர்மனி]]யில், [[வுர்ட்டெம்பர்க்]] இலுள்ள [[உல்ம்]] என்னுமிடத்தில், [[1879]] ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார், ஹேர்மன் ஐன்ஸ்டீன் manoj, பிற்காலத்தில் ஒரு மின்வேதியியல் சார்ந்த தொழில் நிலையமொன்றை நடத்திவந்தார். தாயார் போலின் கோச். இவர் ஒரு [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் [[வயலின்|வயலினும்]] கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய [[திசையறி கருவி]]யொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் [[மாதிரியுரு]]க்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார். எனினும், சிறுவனாக இருந்தபோது இவருக்கு மிக மெதுவாகவே கற்கமுடிந்தது எனச் சிலர் கூறுகிறார்கள். இவர் தனது 12 ஆவது அகவையிலேயே [[கணிதம்]] படிக்க ஆரம்பித்தார். இவருடைய உறவினரிருவர் [[அறிவியல்]], கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம்.
 
இவரது தந்தையாருடைய தொழிலில் நட்டம் ஏற்பட்டதனால், [[1894]] ல், அவரது குடும்பம் [[மியூனிக்]]கிலிருந்து, [[இத்தாலி]]யிலுள்ள [[மிலான்]] நகரையடுத்துள்ள [[பேவியா]] என்னுமிடத்துக்கு, இடம் பெயர்ந்தது. ஆனால் அல்பர்ட், மியூனிக்கிலேயே பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காகத் தங்கியிருந்தார். பாடசாலையில் ஒரு தவணையை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் இணைந்துகொள்ளப் பேவியா சென்றார். பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காக ஐன்ஸ்டீன் [[சுவிட்சர்லாந்து]]க்கு அனுப்பப்பட்டார். [[1896]]ல் பாடசாலைப் படிப்பை முடித்துக்கொண்டு, சுவிட்சர்லாந்தின் [[சூரிச்]] நகரிலுள்ள [[சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்|சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்தார். இந்தச் சமயத்தில் அவர் தனது ஜெர்மனி நாட்டு குடியுரிமையை விட்டு, நாடற்றவரானார். [[1898]]ல் [[மிலேவா மாரிக்]] என்னும் உடன்கற்றுவந்த செர்பிய பெண்ணொருவரைக் கண்டு காதல் கொண்டார். [[1900]] இல், சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் டிப்ளோமாவைப் பெற்றுக்கொண்டார். [[1901]] இல், இவர் சுவிற்சர்லாந்தின் குடியுரிமையைப் பெற்றார். இவருக்கு, மிலேவாவை விவாகம் செய்துகொள்ளாமலே, அவர்மூலம், லிசேர்ள் என்னும் ஒரு மகள் [[1902]]ல் பிறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ஐன்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது