சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
சி *திருத்தம்*
வரிசை 39:
}}
 
[[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] மூன்றாவது '''சட்டமன்றத் தேர்தல் 1962''' ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. ஏற்கனவே ஆட்சியிலில்ஆட்சியில் இருந்த [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. [[காமராஜர்]] மூன்றாவது முறையாக தமிழகத்தின் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரானார்]].
 
==தொகுதிகள்==
வரிசை 45:
 
==அரசியல் நிலவரம்==
1946 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநிலத்தை ஆண்டு வந்த காங்கிரசு, காமராஜரின் தலைமையில் செயல்பட்டு வந்தது. அவரே முதல்வராகவும் இருந்தார். காமராஜர், [[பெரியார்]] ஈ வே. ராமசாமியின் திராவிடர் கழகத்தின் ஆதரவையும் பெற்றிருந்தார். 1957 இல் முதல்வர் பதவியிலிருந்து விலகிய [[ராஜாஜி|ராஜகோபாலாச்சாரி]], தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசை விட்டு வெளியேறி சீர்திருத்தக் காங்கிரசு என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் (1959 இல் அதுவே [[சுதந்திராக் கட்சி|சுதந்திராக் கட்சியாக]] மாறியது). [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] இல் நடந்த முந்தைய தேர்தலில் முக்கிய எதிர்க் கட்சியாக மாறிய [[திராவிட முன்னேற்றக் கழகம்]] ஐந்தாண்டுகளில் மேலும் வளர்ச்சி பெற்றிருந்தது. கட்சியோடு சேர்ந்து உட்கட்சிப் பூசலும் வளர்ந்திருந்தது. 1961 இல் திமுக வின் தலைவர்களுள் ஒருவரான் [[ஈ. வெ. கி. சம்பத்]] கட்சியை விட்டு வெளியேறி [[தமிழ் தேசியக் கட்சி]] என்ற புதிய கட்சியை தொடங்கினார். அவருடன் நடிகர் [[சிவாஜி கணேசன்]], கவிஞர் [[கண்ணதாசன்]] ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்|முஸ்லிம் லீக்]], [[இந்திய பொதுவுடமைக் கட்சி|இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]], [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்|ஃபார்வார்டு ப்ளாக்]], [[சி. பா. ஆதித்தனார்|சி. பா. ஆதித்தனாரின்]] நாம் தமிழர் கட்சி, [[அம்பேத்கர்|அம்பேத்கரின்]] குடியரசு கட்சி, பொதுவுடைமைக் கட்சி, பிரஜா சோஷியலிஸ்ட்சோசியலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.
 
பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரசு, காமராஜரின் தலைமையில் பலம் பொருந்திய கட்சியாக மாறியிருந்தது. ஆனால் எதிர்எதிர்க் கட்சியான திமுகவும் நல்ல வளர்ச்சி கண்டிருந்தது. இந்தத் தேர்தலில் அனைத்து எதிர்எதிர்க் கட்சியினரையும் ஓரணியில் திரட்ட [[கா. ந. அண்ணாதுரை]] முயன்றார். ஆனால், இடதுசாரி கம்யூனிஸ்டுகளுக்கும் வலதுசாரி சுதந்திராக் கட்சியினருக்கும் இடையே இருந்த கொள்கை ஒவ்வாமை காரணமாக அவரது முயற்சி கைகூட வில்லைகைகூடவில்லை. இறுதியில் [[திருச்சி மாவட்டம்|திருச்சி மாவட்டத்தில்]] மட்டும் திமுக விற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் தொகுதி உடன்பாடு இருந்தது. .எதிர்கட்சிகளின்எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையின்மையாலும் பெரியாரின் ஆதரவாலும் மேலும் வலுவடைந்திருந்த காங்கிரசு, இந்தத் தேர்தலை பெரும் பலத்துடன் சந்தித்தது,<ref name="Robert Hardgrave">{{cite journal | title=The DMK and the Politics of Tamil Nationalism| author=Robert L. Hardgrave, Jr.| journal=Pacific Affairs| year=1964-1965| volume=37|issue=4| pages=396–411| url=http://www.jstor.org/stable/2755132}}</ref><ref>{{cite news | url=| title=| publisher=The Hindu| date=19 february 1962| accessdate=}}</ref><ref name="Lloyd I. Rudolph">{{cite journal | title=Urban Life and Populist Radicalism: Dravidian Politics in Madras| author=Lloyd I. Rudolph| journal=The Journal of Asian Studies| year=May 1961| volume=20|issue=3| pages=283–297| url=http://www.jstor.org/stable/2050816}}</ref><ref>Kannan. R (2009), Anna:Life and Times of C. N. Annadurai. Penguin</ref>
 
இத்தேர்தலில் திரைப்படத்துறையினரின் பங்கு பெரிதாக இருந்த்துஇருந்தது. [[எம். ஜி. ராமச்சந்திரன்]] (எம். ஜி. ஆர்) திமுக வின் சார்பாக பிரச்சாரம் செய்தார். நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் [[தேனி]] சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சிவாஜி கணேசன் தமிழ் தேசியக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். காங்கிரசு “வாக்குரிமை” என்ற பிரச்சாரப் படத்தைத் தயாரித்து தமிழகமெங்கும் திரையிட்டது.<ref name="Robert Hardgrave"/><ref name="Lloyd I. Rudolph"/>
 
==தேர்தல் முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1962" இலிருந்து மீள்விக்கப்பட்டது