அலைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
ஒத்ததிர்வு
வரிசை 14:
பொருளொன்றின் மீது சீரலைவு விசையைச் செயல்படுத்தி, இயல் அதிர்வெண் அல்லாமல் விசையின் அதிர்வெண்ணில் அதிர்வடையச் செய்தால், அந்த அலைவுகளை திணிப்பு அலைவுகள் எனலாம். புறவிசையை "இயக்கி" என்றும் அதிர்வடையும் பொருளை "இயங்கி" என்றும் கூறலாம். புறச்சீரலைவு விசையானது, பொருளை அதிர்வடையச் செய்கிறது. இயக்கி மற்றும் இயங்கியின் அதிர்வெண் வேறுபாட்டினைக் கொண்டு திணிப்பதிர்வின் வீச்சினைக் கணக்கிடலாம். அதிர்வெண் வேறுபாடு அதிகமாக இருப்பின் திணிப்பு அலைவுகளின் வீச்சு குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டுகள்: கம்பிகள் உள்ள இசைக் கருவிகளின் அமைப்பு திணிப்பு அதிர்விற்கு
உட்படுகிறது.
 
==ஒத்ததிர்வு==
[[File:Spring resonance.gif|thumb|இப்படத்தில் சுருள்வில் தொடர்ச்சியாக பல அதிர்வெண்களுக்கு உட்படுத்தப்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்கு வீச்சு அதிகமாக காணப்படுகிறது(மேலிருந்து இரண்டாவது காணவும்). ஏனென்றால் அந்த குறிப்பிட்ட அதிர்வெண்ணும் சுருள்வில்லின் இயற்கை அதிர்வெண்ணும் ஒத்து இருப்பதால் ஒத்திர்வு ஏற்பட்டு வீச்சு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.]]
திணிப்பதிர்வில், அதிர்வெண் வேறுபாடு குறைவாக இருப்பின் வீச்சு அதிகமாக இருக்கும். இரு அதிர்வெண்களும் சமமாக இருப்பின் வீச்சு பெருமமாக இருக்கும். இந்நிகழ்வு
திணிப்பதிர்வில் ஒரு சிறப்பு நிகழ்வாகும். புறச்சீரலைவு விசையின் அதிர்வெண்ணும் அமைப்பின் அலைவின் இயல் அதிர்வெண்ணும் சமமாக இருப்பின், அலைவின் வீச்சு மிக அதிகமாக இருக்கும். இதனை ஒத்ததிர்வு என்கிறோம். ஒத்ததிர்வுகளால் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. நன்மைக்கு உதாரணமாக, வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தொட்டிச் சுற்றில் ஒத்ததிர்வைப் பயன்படுத்தி தேவையான அதிர்வெண்ணைப் பெறலாம். தீமைக்கு உதாரணமாக, நிலநடுக்கத்தின் போது ஒத்ததிர்வு அழிவை ஏற்படுத்தும். நிலநடுக்கத்தினால் ஏற்படும் சீரலைவுகளின் அதிர்வெண் கட்டிடங்களின் அதிர்வெண்ணிற்குச் சமமாக இருந்தால், பெரும வீச்சுடன் கட்டிடங்கள்
அலைவுற்று சிதைய நேரிடும்.
 
==தொடரலை சாதனங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அலைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது