21ம் நூற்றாண்டில் மூலதனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
'''21ம் நூற்றாண்டில் மூலதனம்''' (''Capital in the Twenty-First Century'', [[பிரெஞ்சு]]: ''Le Capital au XXIe siècle'') பிரெஞ்சுப் பொருளியலாளர் [[தாமசு பிக்கெட்டி]] எழுதிய பொருளியல் நூல். 2013 ஆம் ஆண்டு [[பிரெஞ்சு]] மொழியில் வெளியான இந்நூல் [[ஐரோப்பா]]விலும், [[வட அமெரிக்கா]]விலும் நிலவும் [[வருவாய் சமனின்மை|வருவாய்]] மற்றும் [[செல்வச் சமனின்மை]] குறித்த ஆய்வு நூலாகும். ஆகஸ்ட் 2013 இல் வெளியான பிரெஞ்சுப் பதிப்பு ஆர்த்தர் கோல்ட்ஹாமரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஏப்ரல் 2014 இல் வெளியானது.<ref>"[http://www.businessweek.com/articles/2014-05-29/pikettys-capital-economists-inequality-ideas-are-all-the-rage Piketty's Capital: An Economist's Inequality Ideas Are All the Rage]" by [[Megan McArdle]], ''[[Bloomberg Businessweek]]'', May 29, 2014</ref>
 
ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்ட நூல்களில் இதுவே பெரு வெற்றி கண்ட நூலாகும்.<ref>Marc Tracy (24 April 2014). [http://www.newrepublic.com/article/117498/pikettys-capital-sold-out-harvard-press-scrambling Piketty's 'Capital': A Hit That Was, Wasn't, Then Was Again: How the French tome has rocked the tiny Harvard University Press]. ''[[The New Republic]].'' Retrieved 27 April 2014.</ref> ''[[தி நியூயார்க் டைம்ஸ்]]'' இதழின் அதிக விற்பனையான நூல்களின் பட்டியலில் கெட்டி அட்டை [[அபுனைவு]]ப் பிரிவில் முதலிடத்தில் பல வாரங்கள் இடம் பெற்றிருந்தது.<ref>{{cite web|title=Best Sellers May 18, 2014|publisher=[[New Yorkநியூயார்க் Timesடைம்ஸ்]]|url=http://www.nytimes.com/best-sellers-books/2014-05-18/hardcover-nonfiction/list.html|date=18 May 2014|accessdate=29 January 2015}}</ref> உலக அளவில் பெரும் வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஜனவரி 2015 வரை இந்நூலின் பதினைந்து லட்சம் படிகள் (ஆங்கில, பிரெஞ்சு, இடாய்ச்சு, எசுப்பானிய, மாண்டரின் பதிப்புகள்) விற்பனையாகியிருந்தன.<ref>{{cite news|title=French economist and best-selling author Thomas Piketty on Thursday refused France’s highest honour – the Légion d’Honneur.|publisher=[[France 24]]|url=http://www.france24.com/en/20150101-best-selling-economist-piketty-refuses-france-top-honour|date=1 January 2015|accessdate=29 January 2015}}</ref>
 
முதலீட்டிற்குக் கிட்டும் [[திரும்பு வீதம்]] (r) பொருளியல் வளர்ச்சி வீதத்தை (g) விட நெடுங்காலம் கூடுதலாக இருப்பின், [[செல்வக் குவிப்பு]] நிகழும் என்பதே இந்நூலின் மையக் கருத்து. இதனால் வருவாய்ச் சமனின்மை அதிகரித்து சமூக, பொருளியல் நிலையின்மைக் கூடும் என்றும் கணிக்கிறது. இந்த நிலை முற்றி உலகச் செல்வத்தின் பெரும் பகுதி எண்ணிக்கையில் மிகக் குறைந்த ஒரு சிறு கூட்டத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைத் தவிர்க்க, உலகமெங்கும் [[வளர்விகித வரி|வளர்விகித]] [[வருமான வரி]] விதிக்க வேண்டும் என்று பிக்கெட்டி இந்நூலில் பரிந்துரைக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/21ம்_நூற்றாண்டில்_மூலதனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது