சென்னகேசவர் கோயில், பேளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
==வரலாறு==
[[படிமம்:Chennakeshava mainshrine.jpg|thumb|250px|left|சென்னகேசவர் கோயிலின் ஒரு பகுதி]]
இக் கோயில் கி.பி 1117 ஆம் ஆண்டில் ஹோய்சால மன்னனான [[விஷ்ணுவர்தனன்|விஷ்ணுவர்த்தனனால்]] கட்டுவிக்கப்பட்டது. இது கட்டப்பட்டதன் காரணம் தொடர்பாக வரலாற்றாளர்களிடையே பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. விஷ்ணுவர்தனனின் போர் வெற்றியைக் குறிக்கவே இது கட்டப்பட்டது என்னும் கருத்தே பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற கருத்தாக உள்ளது. எனினும், ஹோய்சாலர்கள் மீது ஆதிக்கம் செலுத்திய [[சாளுக்கியர்]]களை வென்ற பின்னர், [[கட்டிடக்கலை]]யில் அவர்களிலும் மேம்பட்ட திறமையை வெளிப்படுத்துவதற்காகவே இக் கோயில் கட்டப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர். இன்னொரு சாரார், [[சோழர்|சோழருக்கு]] எதிராக ஹோய்சாலர்கள் நடத்திய தலைக்கோட்டைப் போரில் பெற்ற வெற்றியைக் குறிக்கவே இக்கோயில் கட்டப்பட்டதாக எண்ணுகின்றனர். விஷ்ணுவர்த்தனன் [[சமணம்|சமணசமயத்தில்]] இருந்து வைணவத்துக்கு மாறியதைக் குறிக்கவே வைணவக் கோயிலான இது கட்டப்பட்டதாக நம்புவோரும் உள்ளனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சென்னகேசவர்_கோயில்,_பேளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது