யானை ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
===வரலாறு===
 
அன்றைய காலகட்டத்தில் ஏமன் பிரதேசம் அபிசீனியாவின் (சோமாலியா/எரித்திரியா) ஆட்சியின் கீழ் இருந்தது. இப்பிரதேசத்தின் அதிகாரியாக இருந்தவர் அப்ரஹா என்ற அபிசீனியராகும். முழு அரேபியாவினதும் யாத்திரைத் தலங்களில் உயரிடம் பெற்றிருந்த மக்காவின் (மெக்கா) மகோன்னத நிலையைத் தகர்க்கும் எண்ணத்துடன் அப்ரஹா, ஏமன் பிரதேசத்திலுள்ள ஸன்ஆ என்ற இடத்தில் மாபெரும் ஆலயமொன்றை நிறுவினார். அதில் ஷீபா அரசியின் கைவிடப்பட்டிருந்த மாளிகைகளிலிருந்து தங்கம், வெள்ளி போன்றவற்றாலான சிலுவைகளைக் கொண்டுவந்து நிறுவி, அந்த ஆலயத்தை மிகவும் அழகானதாக நிர்மாணித்தார். பின்னர் தனது அரசனான 'நஜ்ஜாசி' க்கு '''" மன்னவனே! உலகத்திலேயே எங்குமில்லாதவாறான மிக அழகானதோர் ஆலயத்தை நான் உனக்காக இங்கு உருவாக்கியுள்ளேன். அரபிகளின் புனித யாத்திரிகர்களை இந்த ஆலயத்தை நோக்கித் திருப்பும் வரை நான் ஓயமாட்டேன்"''' என்றொரு கடிதத்தை அனுப்பினார். இதைத் தெரிந்துகொண்ட அரேபியர்கள், அப்ரஹாவின் மீது பெரும் கோபம் கொண்டார்கள். முடிவில் அரேபியரில் ஒருவன் அப்ரஹா நிர்மாணித்த ஆலயத்தின் தூய்மையைக் கெடுக்கும் நோக்கத்தோடு அங்கு சென்று, இரவோடிரவாகத் தன்நேக்கத்தைதன்நோக்கத்தை நிறைவேற்றி பாதுகாப்பாகத் திரும்பிவிட்டான்.
 
நிகழ்ந்த சம்பவத்தை அறிந்த அப்ரஹா கடுமையான கோபத்தோடு, மக்காவிலிருக்கும் அரேபியர்களின் யாத்திரைத் தலமாகிய கஃபாவைத் தரைமட்டமாக்கத் திடசங்கற்பம் கொண்டு, முன்னிலையில் யானையொன்றை கொண்ட மாபெரும் படையைத் தயார் செய்தார். ஏமனில் வாழ்ந்த அரேபியர்கள் இதைக் கேள்விப்பட்டு படையெடுப்பைத் தடுத்து நிறுத்த முனைந்ததனால் அப்ரஹாவால் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்களின் தலைவனான நுபைல் என்பவன் தனது உயிருக்குப் பயந்து படையினருக்கு வழிகாட்ட ஒப்புக்கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/யானை_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது