"உஹத் யுத்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,303 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
(*திருத்தம்*)
அடுத்த ஆண்டு நோன்பு நோற்கும் ரமழான் மாதத்தின் கடைசித் தினங்களுள் ஒன்றில் ஒரு குதிரைவீரன் நபியவர்களிடம் முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அது நபியவர்களின் மாமனார் அப்பாஸ் அவர்களிடமிருந்து வந்திருந்தது. அதில் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி 3000 படைவீரர்களை அழைத்துக் கொண்டு வருவதற்கு இறைமறுப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதில் 700 குதிரைப்படை, அதேயளவு ஒட்டகங்கள் மற்றும் கவசமணிந்த காலாட்படை அத்துடன் படைவீரர்களை மகிழ்விக்க பெண்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதம் வந்து சேர்ந்த வேளை மக்காவிலிருந்து படை நகர ஆரம்பித்திருந்தது.
 
எதிரிகள் தம்மை வந்து சேர்வதற்கு ஒரு வாரமாகும் என ஊகித்த நபியவர்கள், மதீனா நகருக்கு வெளியே வாழ்ந்த மக்களனைவரையும் நகருக்கு உள்ளே வந்து தங்கியிருப்பதற்கு ஆவன செய்யுமாறு தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள். எதிரிகள் கரையோரத்து மேற்குப்பாதை வழியாக வந்து கொண்டிருக்கிறனர் என்றொரு செய்தியும், பின்னர் உஹத் மலையின் அடிவாரத்தில் பாசறை அமைத்துக் கொண்டனர் என்றொரு செய்தியும் நபியவர்களை வந்தடைந்தது. உடனே தமது தோழர்களை அழைத்து ஆலோசனை செய்துவிட்டு யுத்தத்திற்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள். மறுநாள் பிற்பகல் தொழுகையை முடித்தபின் 1000 வீரர்களைக் கொண்ட படை நபியவர்களின் தலைமையில் உஹதை நோக்கி நகரத் தொடங்கியது.
 
ஷைகன் என்ற இடத்தை அடைந்தபோது மாலை நேரமாகியது. மாலைநேரத் தொழுகையை முடித்த நபியவர்கள் தமது படையினரைப் பார்வையிடச் சென்றார்கள். அச்சமயம் எதிரிகள் மிக அதிகமாக உள்ளனர் என்ற பொய்க் காரணத்தை முன்வைத்து 300 நயவஞ்சகர்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்று விட்டனர். மிகுதியாக இருந்த 700 வீரர்களில் எட்டுச் சிறுவர்களும் இருந்தனர். அவர்களில் மல்யுத்தம் மற்றும் வாள்வீச்சு தெரிந்த இருவரைத் தவிர ஏனைய அறுவரையும் மதீனாவுக்குத் திருப்பி அனுப்பி வைத்தார்கள் நபிகளார். மிகுதியாக இருந்த வீரர்களில் வில்வித்தை தெரிந்த சிலரை காலையில் ஒரு சிறிய குன்றின் மீது நின்று கண்காணிக்க வேண்டுமெனப் பணித்து, ஏனையோரை ஐம்பது, ஐம்பது பேராக அணிவகுத்து எதிரிகளைத் தாக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.
 
மறுநாள் காலை யுத்தம் ஆரம்பித்தது. ஏற்கனவே அணிவகுத்து நின்ற எதிரிப் படைகளைத் துவம்சம் செய்ய ஆரம்பித்தது நபிகளாரின் படை. சிறிது நேரத்தில் எதிரிப்படைகள் நாலா பக்கமும் சிதறியபோது, அவர்கள் விட்டுச் சென்ற பொருள்களை நபியவர்களின் படைவீரர்கள் எடுப்பதைக் கண்டு, குன்றின் மீது பாதுகாப்பிற்காக நின்ற வில்வீரர்களும் குன்றை விட்டு இறங்கி பொருள்களை எடுக்கத் தொடங்கினார்கள். குன்றின் மீது வீரர்கள் எவருமில்லை என்று தெரிந்த எதிரிகள் பின்புறமாக வந்து நபியவர்களின் படைகளைத் தாக்கத் தொடங்கினார்கள். இதனால் நபியர்களின் படையினருக்கு பெரும் சேதமேற்பட்டது. மாலை மங்கி இருள் சூழ்ந்த வேளையில் எதிரிப்படை வீரர்களில் ஒருவன் எறிந்த கல் நபியவர்களின் வாயில் பட்டு, அவர்களின் பல் ஒன்று உடைந்ததால் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. இரத்தம் கொட்டியதை அறிந்த எதிரிப் படையினர் 'முகம்மது இறந்து விட்டார்' என்று கோசமிட்டனர். இதனால் கலக்கமுற்ற நபிகளாரின் படையினர் மிகவும் மனச் சோர்வுடன் பாசறைக்குத் திரும்பினர். முகம்மது இறந்து விட்டார் என அறிந்த எதிரப் படையினரும் யுத்தம் முடிந்து விட்டதாவே எண்ணி, மிகுதியாக இருந்த வீரர்கள், குதிரைகள், ஒட்டகங்களோடு மக்காவுக்குத் திரும்பினர்.
1,214

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1993052" இருந்து மீள்விக்கப்பட்டது