"உஹத் யுத்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

111 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
மறுநாள் காலை யுத்தம் ஆரம்பித்தது. ஏற்கனவே அணிவகுத்து நின்ற எதிரிப் படைகளைத் துவம்சம் செய்ய ஆரம்பித்தது நபிகளாரின் படை. சிறிது நேரத்தில் எதிரிப்படைகள் நாலா பக்கமும் சிதறியபோது, அவர்கள் விட்டுச் சென்ற பொருள்களை நபியவர்களின் படைவீரர்கள் எடுப்பதைக் கண்டு, குன்றின் மீது பாதுகாப்பிற்காக நின்ற வில்வீரர்களும் குன்றை விட்டு இறங்கி பொருள்களை எடுக்கத் தொடங்கினார்கள். குன்றின் மீது வீரர்கள் எவருமில்லை என்று தெரிந்த எதிரிகள் பின்புறமாக வந்து நபியவர்களின் படைகளைத் தாக்கத் தொடங்கினார்கள். இதனால் நபியர்களின் படையினருக்கு பெரும் சேதமேற்பட்டது. மாலை மங்கி இருள் சூழ்ந்த வேளையில் எதிரிப்படை வீரர்களில் ஒருவன் எறிந்த கல் நபியவர்களின் வாயில் பட்டு, அவர்களின் பல் ஒன்று உடைந்ததால் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. இரத்தம் கொட்டியதை அறிந்த எதிரிப் படையினர் 'முகம்மது இறந்து விட்டார்' என்று கோசமிட்டனர். இதனால் கலக்கமுற்ற நபிகளாரின் படையினர் மிகவும் மனச் சோர்வுடன் பாசறைக்குத் திரும்பினர். முகம்மது இறந்து விட்டார் என அறிந்த எதிரப் படையினரும் யுத்தம் முடிந்து விட்டதாவே எண்ணி, மிகுதியாக இருந்த வீரர்கள், குதிரைகள், ஒட்டகங்களோடு மக்காவுக்குத் திரும்பினர்.
 
==மேற்கோள்கள்==
 
முகம்மது - மார்டின் லிங்ஸ்
1,214

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1993057" இருந்து மீள்விக்கப்பட்டது