இராமன் விளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
[[ஒளி]] ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை '''[[சர்.சி.வி.ராமன்]]''' 1928- ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு '''இராமன் விளைவு''' (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்பிற்காக இராமனுக்கு 1930- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
{{பகுப்பில்லாதவை}}
 
<ref>இயற்பியல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு,தமிழ் நாடு பாடநூல் கலகம்.</ref>'''ஒளிசிதறல் பற்றிய இராமன் விளைவு'''''அறிமுகம்''பொருளொன்றின் வழியே ஒற்றைநிற ஒளி செல்லும் போது சிதறலடைகிறது என 1928 ஆம் ஆண்டு சர்.சி.வி.இராமன் சோதனையின் மூலம் கண்டறிந்தார்.சிதறலடைந்த ஒளி, படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமல்லாமல் சில புதிய அதிர்வெண்களையும் கொண்டிருந்தது.இதனை இராமன் விளைவு என்கிறோம்.
== ராமன் விளைவு என்றால் என்ன? ==
'''விளக்கம்'''*இராமன் விளைவில் மாற்றம் அடைந்த அதிர்வெண் கொண்ட வரிகளை இராமன் வரிகள் என்கிறோம்.*படுகின்ற அதிர்வெண்ணை விட குறைவான அதிர்வெண் கொண்ட வரிகள் ஸ்டோக்ஸ் வரிகள் ஆகும்.
ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே '''[[ராமன் சிதறல்]]''' [Raman Scattering] அல்லது '''ராமன் விளைவு''' [Raman Effect] என அழைக்கப்படுகிறது; இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.<ref>[http://kuttiescorner.blogspot.com/2008/01/1_07.html குட்டீஸ் கார்னர்]</ref> அவை
:* படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி;
:* முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;
:* முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்;
 
== பயன்பாடுகள் ==
 
இயற்பியலை விட வேதியியலில் இராமன் சிதறல் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படுவது இராமன் விளைவே. பகுப்பிற்குட்பட்ட பொருளின் “கைரேகை” யாக இராமன் நிறமாலை உள்ளது; திரவங்களுக்கு மட்டுமல்லாது வளிம, திடப்பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.
 
:* பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணித்தல்,
:* சட்டப்புறம்பான போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல்,
:* வண்ணப்பூச்சுகள் இருகும்போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறிதல்,
:* அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்தே ஆய்வு செய்தல்,
:* 10 <sup> -11 </sup> வினாடியே ஆயுட்காலம் கொண்ட நிலையற்ற வேதி இனங்களின் நிறமாலைகளை பதிவு செய்வதில் ஒளிவேதியலாளர்கள், ஒளிஉயிரியலாளர்களுக்கு லேசர்-இராமன் நிறமாலையியல் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.<ref>American Chemical Society - Raman Effect -The Raman Effect as a Chemist’s Tool [http://portal.acs.org/portal/acs/corg/content?_nfpb=true&_pageLabel=PP_ARTICLEMAIN&node_id=924&content_id=WPCP_007605&use_sec=true&sec_url_var=region1&__uuid=6b364aa8-5d38-4063-a8ff-5650956615bf#P37_7265]</ref>
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்கள் ==
 
* எதிர் ஸ்டோக்சு = anti-Stokes;
* சிதைவுறுத்தா வேதிப்பகுப்பு = non-destructive chemical analysis;
* பெட்ரோலியவேதித் தொழில் = petrochemical industry;
* மருந்தாக்கத் தொழில் = pharmaceutical industry;
* நிலையற்ற வேதி இனம் = transient chemical species;
* ஒளிவேதியலாளர் = photochemist;
* ஒளிஉயிரியலாளர் = photobiologist;
 
== வெளியிணைப்புகள் ==
* [http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/atmos/raman.html Explanation from Hyperphysics in Astronomy section of gsu.edu]
* [http://www.kosi.com/Raman_Spectroscopy/rtr-ramantutorial.php?ss=700 Raman Spectroscopy - Tutorial at Kosi.com]
* [http://www.scientificamericanpast.com/Scientific%20American%201930%20to%201939/1/med/sci121930.htm December 1930;Prof. R. W. Wood Demonstrating the New "Raman Effect" in Physics]
* [http://www.lavision.de/techniques/mie_raman_rayleigh/raman_imaging.php A short description of spontaneous Raman scattering]
* [http://portal.acs.org/portal/acs/corg/content?_nfpb=true&_pageLabel=PP_ARTICLEMAIN&node_id=924&content_id=WPCP_007605&use_sec=true&sec_url_var=region1&__uuid=1e67280a-2f5d-46fe-8959-1bb33ba4c173]
 
[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:இயற்பியல் தத்துவங்கள்]]
[[பகுப்பு:ஒளியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இராமன்_விளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது