"வெப்பம் (இயற்பியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,452 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
வெப்பத்துடன் தொடர்புடைய ஓர் குழப்பமான சொல்லாக [[வெப்ப ஆற்றல்]] உள்ளது. இது ஒர் அமைப்பில் அதன் வெப்பநிலைக்கு ஏற்ப அதிகரிக்கும் ஆற்றலை பற்றி கூறுகிறது. ஒரு அமைப்பை அல்லது பொருளைச் சூடாக்கும் அல்லது குளிர்விக்கும்போது அதன் வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும் ஆற்றலை இது குறிக்கும்.
 
==வெப்பக் கடத்தல்==
திடப் பொருள்களில் வெப்பக்கடத்தல் முறையில் மட்டுமே வெப்பம் பரவுகிறது, திடப் பொருளின் ஒருமுனை வெப்பப்படுத்தப்படும்போது, அம்முனையிலுள்ள அணுக்களும் மூலக்கூறுகளும் அதிக கிளர்ச்சிக்கு உட்பட்டு அதிகமான வீச்சுடன் அதிர்வுறத் துவங்கும். இந்த மாறுபாடு அருகிலுள்ள மூலக்கூறுகளுக்குக் கடத்தப்படும்.
 
==வெப்பச்சலனம்==
பாய்மத்தில் உள்ள துகள்களின், இயக்கத்தின் மூலமாகவே வெப்பம், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்படும் நிகழ்வு, வெப்பச் சலனம் எனப்படும். பாய்மத்தை வெப்பப்படுத்தும்போது, வெப்பம் அடைந்த பகுதி விரிவடைவதால் குறைவான அடர்த்தியைப் பெறுகிறது. அப்பகுதி மேலே எழும்போது அவ்விடத்தை குளிர்ந்த மேற்பகுதிகள் நிரப்புகின்றன. மீண்டும் குளிர்ந்த பகுதிகள் வெப்பமேற்றப்படுவதால் அவை மேலெழும். அவ்விடத்தை குளிர்ந்த பகுதிகள் மீண்டும் நிரப்பும். இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறும். இவ்வகையில் நடைபெறும் வெப்பமாற்றம், மூலக்கூறுகளின் இயக்கமின்றியே ஆற்றல் கடத்தல் நடைபெறும் வெப்பக் கடத்தல் முறையிலிருந்து மாறுபட்டதாகும்.
 
==வெப்பக்கதிர்வீச்சு==
பருப்பொருள் ஊடகத்தின் உதவியின்றி வெப்பம் மாற்றப்படும் நிகழ்வினை வெப்பக் கதிர்வீசல் என்கிறோம். ஒரு பொருளிலிருந்து, அதன் வெப்பநிலை காரணமாக கதிர்வீச்சு முறையில் ஆற்றல் வெளிப்படுவது வெப்பக் கதிர்வீச்சு எனப்படும். வெப்பக்கதிர் வீச்சு பின்வருவனவற்றைச் சார்ந்துள்ளது.
# பொருளின் வெப்பநிலை,
# கதிர்வீசும் பொருளின் தன்மை
 
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1994516" இருந்து மீள்விக்கப்பட்டது