குசுதாவியா, செயின்ட் பார்த்தெலெமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 111:
 
துறைமுகத்தைக் காக்கும் விதமாக 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் மூன்று கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன: இவை முறையே ஆசுக்கர் (முன்னதாக குசுதாவ் அடோல்ஃப்), கார்ல் மற்றும் குசுதாவ் எனப் பெயரிடப்பட்டுள்ளன. துறைமுக வாயிலில் உள்ள ஆங்கில பேராயராட்சிகுட்பட்ட தேவாலயம் 1855இல் கட்டப்பட்டது.
==வசதிகள்==
நகரத்தின் தெற்கில் ஷெல் கடற்கரையை நோக்கியவாறுள்ள கார்ல் கோட்டையும் வடக்கில் கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள குஸ்தாவ் கோட்டையும் நடையேறுபவர்களுக்கு உகந்த இடமாக உள்ளது. குசுதாவியத் தீபகற்பத்தின் முனையில் உள்ள ஆசுக்கர் கோட்டையில் ஆயுதக் காவல்துறை அமைந்துள்ளது. இத்தீபகற்பத்தின் விக்டர் சோல்கர் சாலையின் இறுதியில் அருங்காட்சியகம் உள்ளது. குசுதாவியாவில் அமெரிக்க, இத்தாலிய, பிரான்சிய மற்றும் பிற உணவுமுறை உணவகங்கள் உள்ளன. இங்குள்ள உயர்தர அங்காடிகள் தீவிற்கு முதன்மை வருவாய் ஈட்டுவனவாக உள்ளன. தவிரவும் சுற்றுலாப் பயணிகளுக்காக மிக உயர்தர தங்குவிடுதியும் உள்ளது. சுவீடிய கிளைத்தூதரகமும் இங்குள்ளது.
==வானிலை==
[[File:Gustavia San Barth 001.jpg|thumb|குசுதாவியா]]
[[File:Gustavia Harbor, Saint-Barthélemy.jpg|thumb|குசுதாவியாவின் துறைமுகக் காட்சி]]
இங்கு வெப்பமண்டல வானிலை நிலவுகின்றது. வெப்பநிலையில் மிகக் குறைந்த வேறுபாடுகளே காணப்படுகின்றன. தீவின் சிறியப் பரப்பளவினால் ({{convert|24|km2|0|abbr=out}}) [[வணிகக் காற்று]]களின் இனிமையான நன்மைகளைப் பெறுகின்றது. நீரின் வெப்பநிலையும் காற்றின் வெப்பநிலையும் ஏறத்தாழ {{convert|27|°C|0}} அளவில் உள்ளன. ஆண்டு இரு பருவங்களாகப் பிரிக்கப்படுகிறது: ஈரமற்ற ''லென்ட்'', மற்றும் ஈரப்பதமுள்ள குளிர்காலம். குளிர்காலம் மே முதல் நவம்பர் வரை உள்ளது. இக்காலத்தில் கடந்து செல்லும் மழைமேகங்கள் 10,15 நிமிடங்களுக்கு மழை பெய்விக்கின்றன. [[கோப்பென் காலநிலை வகைப்பாடு]] முறையில் குசுதாவியா சவன்னா வெப்ப மண்டல வானிலை கொண்டதாக வரையறுக்கப்பட்டு வானிலை நிலப்படங்களில் "Aw" எனக் குறிப்பிடப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.weatherbase.com/weather/weather-summary.php3?s=788663&cityname=Gustavia%2C+Saint+Barth%E9lemy&units= |title=Gustavia, Saint Barthélemy Köppen Climate Classification |publisher=Weatherbase.com |date= |accessdate=2015-06-19}}</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/குசுதாவியா,_செயின்ட்_பார்த்தெலெமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது