வெள்ளி (கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 79:
<!-- தகவற்சட்டம் முடிவு -->
 
'''வெள்ளி''' (''Venus'') [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்பத்தில்]] [[சூரியன்|சூரியனிலிருந்து]] இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு [[கோள்|கோளாகும்]]. நம் இரவு வானத்தில் [[நிலா|நிலவுக்கு]] அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது ''காலை நட்சத்திரம்'' , ''விடிவெள்ளி'' மற்றும் ''மாலை நட்சத்திரம்'' என்றெல்லாம் அழைக்கப் படுகின்றதுஅழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது கூடுதலான [[பைங்குடில் விளைவு|பைங்குடில் விளைவால்]] ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.
 
வெள்ளி [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிறை]] ஒவ்வொரு 224.7 [[புவி]] நாட்களில் சுற்றி வருகின்றது.<ref name="nasa_venus">{{cite web | title = Venus: Facts & Figures | publisher = NASA | url = http://sse.jpl.nasa.gov/planets/profile.cfm?Object=Venus&Display=Facts&System=Metric | accessdate = 2015-07-24}}
</ref> இக்கோளிற்கு [[இயற்கைத் துணைக்கோள்]] ஏதுமில்லை. ஐரோப்பிய வழக்குகளில் இதற்கு உரோமைத் தொன்மவியலில் அழகிற்கும் காதலுக்குமான பெண்கடவுள் வீனசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்தியத் தொன்மவியலில் அசுரர்களின் குருவான சுக்கிரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியில் இக்கோளின் [[தோற்ற ஒளிப்பொலிவெண்]] −4.6 ஆக உள்ளதால் இதன் ஒளியினால் நிழல்கள் உருவாகும்.<ref>{{cite web|url=http://www.digitalsky.org.uk/venus/shadow-of-venus.html|title=The Shadow of Venus|last=Lawrence|first=Pete|date=2005|accessdate=13 June 2012}}</ref> வெள்ளிக்கோள் புவியிலிருந்து சூரியனை நோக்கிய உட்புறக் கோளாக இருப்பதால் எப்போதுமே சூரியனுக்கு அருகாமையில் இருப்பதாகத் தோன்றுகின்றது.
 
வெள்ளிக்கோள் ஓர் திண்மக்கோளாகும். இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரிக் கோள்" எனபடுகின்றது. இக்கோள் புவிக்கு மிக அருகிலுள்ள கோளும் ஒத்த அளவை உடைய கோளும் ஆகும். அதேநேரத்தில் இது பலவகைகளில் புவியிலிருந்து வேறுபட்டுள்ளதும் சுட்டப்படுகின்றது. தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் மிக அடர்த்தியான [[வளிமண்டலம்]] உள்ள கோள் வெள்ளியாகும். இந்த வளிமண்டலம் 96%க்கும் கூடிய [[காபனீரொக்சைட்டு]] அடங்கியது. கோளின் தரைப்பரப்பில் [[வளிமண்டல அழுத்தம்]] புவியை விட 92 மடங்காக உள்ளது. [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தின்]] மிகவும் வெபமிகுந்த கோளாக விளங்கும் வெள்ளியின் தரைமட்ட வெப்பநிலை {{convert|735|K|°C °F|abbr=on}}ஆக உள்ளது. இங்கு [[கார்பன் சுழற்சி]] நடைபெறாமையால் பாறைகளோ தரைப்பரப்பு மேடுபள்ளங்களோ உருவாகவில்லை; தவிரவும் [[உயிர்த்திரள்|உயிர்த்திரளில்]] கரிமத்தை உள்வாங்கிட எவ்வித கரிம உயிரினமும் இல்லை. வெள்ளியின் வளிமண்டலத்தில் [[சல்பூரிக் அமிலம்|சல்பூரிக் அமில]] மேகங்களின் எதிரொளிப்பால் கீழுள்ள தரைப்பரப்பை [[ஒளி]] மூலம் காணவியலாது உள்ளது. முன்னொரு காலத்தில் வெள்ளியில் பெருங்கடல்கள் இருந்திருக்கலாம்;<ref>{{cite journal |author=Hashimoto, G. L.; Roos-Serote, M.; Sugita, S.; Gilmore, M. S.; Kamp, L. W.; Carlson, R. W.; Baines, K. H. |title=Felsic highland crust on Venus suggested by Galileo Near-Infrared Mapping Spectrometer data |journal=Journal of Geophysical Research, Planets |date=2008|volume=113|doi=10.1029/2008JE003134 |pages=E00B24 |bibcode=2008JGRE..11300B24H}}</ref><ref>David Shiga [http://www.newscientist.com/article/dn12769-did-venuss-ancient-oceans-incubate-life.html#.UiwMq8ZMvlU Did Venus's ancient oceans incubate life?], New Scientist, 10 October 2007</ref> ஆனால் இவை பைங்குடில் விளைவின் வெப்பநிலைகளால் ஆவியாகியிருக்கலாம்.<ref name="Jakosky">B.M. Jakosky, "Atmospheres of the Terrestrial Planets", in Beatty, Petersen and Chaikin (eds,), ''The New Solar System,'' 4th edition 1999, Sky Publishing Company (Boston) and Cambridge University Press (Cambridge), pp. 175–200</ref> ஆவியான நீர் [[ஒளிமின்பிரிகை]]யால் பிரிக்கப்பட்டிருக்கலாம்; கோளில் காந்தப்புலங்கள் இல்லாமையால் கட்டற்ற ஐதரசன் [[சூரியக் காற்று|சூரியக் காற்றால்]] கோள்களிடையேயான விண்வெளிக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.<ref name="solarwind">{{cite web|date=28 November 2007|title=Caught in the wind from the Sun |publisher=ESA (Venus Express)|url= http://www.esa.int/SPECIALS/Venus_Express/SEM0G373R8F_0.html|accessdate=2008-07-12}}</ref> வெள்ளியின் தரைப்பகுதி வறண்ட பாலைவனமாக, அவ்வப்போதைய எரிமலை வெடிப்புகளால் புதிப்பிக்கப்பட்ட வண்ணம், உள்ளது.
 
== பௌதிகப் பண்புகள் ==
வரிசை 90:
 
=== புவியியல் ===
வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது. அதில் 10 சதவீதம் மென்மையான லோபடே சமவெளியும் 70 சதவீதம் மென்மையான, ​​எரிமலை சமவெளியும் அடக்கம். இதில் வடதுருவத்தில் ஒரு கண்டமும் வெள்ளியின் நிலநடுக்கோட்டிற்கு சற்று தெற்கில் ஒரு கண்டமும் அமையப் பெற்றுள்ளது. [[ஆஸ்திரேலியா (கண்டம்)|ஆஸ்திரேலியா கண்டத்திற்கு]] இணையான பரப்பளவு கொண்ட வடக்கு கண்டம் பாபிலோனியக் காதல் தெய்வமான இசுதாரின் பெயரில் அழைக்கப்படுகிறது. மேக்ஸ்வெல் மோன்டசு, வெள்ளியின் மிக உயர்ந்த மலையாகும். அதன் சிகரம் சராசரி மேற்பரப்பு உயரமான 11 கி.மீ. தொலைவில் உள்ளது. பரப்பளவில் இரண்டு [[தென் அமெரிக்கா]] கண்டங்களுக்கு இணையான தெற்குதெற்குக் கண்டம் அப்ரோடைட் டெர்ரா கிரேக்க காதல் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.
 
=== காந்தப் புலமும் மையக்கருவும் ===
1967இல் செலுத்தப்பட்ட வெனரா 4 என்ற விண்கலம் வெள்ளியில் உள்ள [[காந்தப் புலம்]] புவியினுடையதை விட மிக வலிவற்றதாக இருப்பதைக் கண்டறிந்தது. இந்தக் காந்தப் புலமும் அயனிமண்டலத்திற்கும் [[சூரியக் காற்று]]க்குமிடையேயான இடைவினையால் தூண்டப்பட்டதாகும்;<ref>Dolginov, Nature of the Magnetic Field in the Neighborhood of Venus, COsmic Research, 1969</ref><ref>{{cite journal |author=Kivelson G. M., Russell, C. T.|title=Introduction to Space Physics|publisher=Cambridge University Press|date=1995|isbn=0-521-45714-9}}</ref> பொதுவாக [[கோள்களின் கருவம்|கோள்களின் கருவத்தில்]] காணப்படும் உள்ளக மின்னியற்றி போன்று வெள்ளியில் இல்லை. வெள்ளியின் சிறிய [[வெள்ளியின் வளிமண்டலம்|தூண்டப்பட்ட காந்த மண்டலம்]] [[அண்டக் கதிர்]]களிலிருந்து வளிமண்டலத்திற்கு எவ்வித பாதுகாப்பும் வழங்குவதில்லை. இந்தக் கதிர்களால் மேகங்களுக்கிடையே மின்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.<ref>{{cite journal|author=Upadhyay, H. O.; Singh, R. N.|title=Cosmic ray Ionization of Lower Venus Atmosphere
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது