உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
 
{{ping|kanags}}ஈரோஸ் எனப்படும் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கவும், ஈழப்புரட்சி அமைப்பும் முற்றிலும் வேறானது அல்ல. அதுபோலவே ஈரோஸ் எனப்படுவது முற்றிலுமாக ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்பதும் அல்ல. ஈழப்புரட்சி அமைப்பு 1975 சனவரி 3 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பு EROs என்று சுருக்கமாக பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட அமைப்பில் லண்டனிலும், இலங்கையிலுமிருந்து ஏராளமான பல்கலைகக்கழக மாணவர்கள் இணைந்தார்கள். அவ்வாறு மாணவர்கள் அதிகளவு இணைந்ததின் காரணமாக ஊடகங்களில் இந்த அமைப்பு EROS/ ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என ஜனரஞ்சகமாக அழைக்கப்பட்டிருக்கின்றது. அது ஒரு பிரச்சார மாயைத்தோற்றம். ஆகவே ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்பது பிரச்சார மாயை என்றே பதியப்படல் வேண்டும். மாறாக ஈழப்புரட்சி அமைப்பு - ஈரோஸ் என்பதுவே அந்த அமைப்பின் சகல ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள பெயர். ஆதாரங்கள் 1. ஈழப்புரட்சி அமைப்பின் ஆய்வு பிரிவின் வெளியீடான ஈழவர் இடர் தீர இரண்டாம் பதிப்பு - வெளியீடு 1984- பக்கம் 3 முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. ''“ இவ்வாய்வு கட்டுரைகள் எமது இயக்கமான ஈழப்புரட்சி அமைப்பின்(EROS) நிறுவனர் இ.இரத்தினசபாபதி அவர்களால் எழுதப்பட்டதாகும்”'' [http://padippakam.com/document/eros/books/elavaredr.pdf ஈழவர் இடர் தீர நூல் மின் வடிவில்] 2. 1990 ஆம் ஆண்டு பாலக்குமார் அவர்கள் ஈரோஸ் எனப்படும் ஈழப்புரட்சி அமைப்பை கலைத்ததாகவே அறிவித்தார். [http://padippakam.com/document/general/Notes/1039.pdf பத்திரிக்கை செய்திகளை பார்க்க சொடுக்கவும்] மேலும், ஈரோஸ் அமைப்பின் மாணவர் அமைப்பாக ஈழமாணவர் பொதுமன்றம் என்ற அமைப்பு உருவாக்கபபட்டது. ஈரோஸ் என்பது ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்றால் எதற்காக இன்னுமொரு மாணவர் அமைப்பை துணை அமைப்பாக நிறுவ வேண்டும். ஈரோஸ் அமைப்பு தாபிக்கும் போது தாபகர் இரத்தினசபாபதியின் வயது 37, அவருடன் இணைந்து அமைப்பை தாபிப்பதில் உதவியவர்களுக்கும் அப்போது ஏறத்தாழ இதே வயதே ஆகும். அப்படியிருக்க இவர்கள் எவ்வாறு மாணவர் இயக்கத்தை தாபிப்பார்கள்? எனவே ஈரோஸ் எனப்படுவது ஈழப்புரட்சி அமைப்பே ஆகும். அதன் துணைஅமைப்பு போன்று தோற்றம் காட்டிய பிரச்சார மாயையே ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்பதாகும். ஈழப்புரட்சிகர மாணவர் இயக்கம் என்பது பிரச்சார புலப்பாடு என்றே பதியபபட வேண்டும். --[[பயனர்:Pazlarichard|Pazlarichard]] ([[பயனர் பேச்சு:Pazlarichard|பேச்சு]]) 20:48, 8 சனவரி 2016 (UTC)
 
 
{{ping|AntanO}}, ஈரோஸ் அமைப்பு 1989 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை பதிவு செய்யும் முன்பே தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. அதன் காரணமாகவே தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டது. தேர்தலின் பின் கட்சி பதிவு செய்யப்பட்டு, வெற்றிபெற்றவர்கள் ஈழவர் முன்னணி என்ற பெயரில் செயற்பட்டனர். இது குறித்து ஈரோஸ் அமைப்பின் ரவி சுந்தரலிங்கம் தமிழ்டைம்ஸ் எனும் இதழுக்கு வழங்கிய நேர்காணலை சான்றாக இணைக்கின்றேன். [http://noolaham.net/project/34/3320/3320.pdf ரவிசுந்தரலிங்கத்தின் நேர்காணல் பக்கம் 7]
 
== முதற் கட்டுரையும் தொகுப்பும் ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Pazlarichard" இலிருந்து மீள்விக்கப்பட்டது