"விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
மார்ச்சு 1980இல் நியூகிர்க், அலெக்சு பாச்சேகோ ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1981 கோடைகாலத்தில் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது; மேரிலாந்தின் சில்வர் இசுபிரிங்கில் நடத்தைசார் ஆய்வுக் கழகத்தில் 17 மகாக்கெ குரங்குளை வைத்து நடத்தப்பட்ட சோதனைகளை குறித்த ''சில்வர் இசுபிரிங் குரங்குகள் வழக்கு'' என்ற வழக்கினால் பெரிதும் அறியப்பட்டது. இந்த வழக்கு பத்தாண்டுகள் தொடர்ந்து நடந்தது; ஐக்கிய இராச்சியத்தில் காவல்துறையால் விலங்குகள் ஆய்வகம் ஒன்று சோதனையிடப்பட்ட ஒரே நிகழ்வாகவும் அமைந்தது; 1985இல் விலங்குகள் நல்வாழ்வு சட்டம் இயற்றப்பட்டது. இதன் பின்னர் பீட்டா உலகளவில் அறியப்பட்ட அமைப்பாக மாறியது.<ref name=SilverSpring>Schwartz, Jeffrey M. and Begley, Sharon. ''The Mind and the Brain: Neuroplasticity and the Power of Mental Force'', Regan Books, 2002, p. 161ff.
*Pacheco, Alex and Francione, Anna. [http://www.animal-rights-library.com/texts-m/pacheco01.htm The Silver Spring Monkeys], in Peter Singer (ed.) ''In Defense of Animals'', Basil Blackwell 1985, pp. 135–147.</ref> இன்று இது நான்கு முதன்மையான பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடுகின்றது—தொழிற்சாலைப் பண்ணையம், விலங்கின மென்மயிர் பண்ணையம், விலங்குகள் சோதனை, மற்றும் மனமகிழ்ச்சிக்காக விலங்குகள் பயன்பாடு. தவிரவும் இந்த அமைப்பு மாமிசம், மீன் உண்ணுதல், நோய்ப்பூச்சிகளைக் கொல்லுதல், நாய்களை சங்கிலியிட்டு பின்புறம் வைத்தல், [[சேவல் சண்டை]], நாய்ச் சண்டை, [[ஆட்டுச் சண்டை]], காளைச் சண்டை போன்றவற்றை எதிர்த்தும் போராடுகின்றது.<ref name=about>[http://www.peta.org/about/index.asp "PETA's mission statement"], PETA, accessed July 3, 2010.</ref>
 
விலங்குகள் உரிமை இயக்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்த அமைப்பிற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நியூகிர்க்கும் பாச்சேகோவும் ஐக்கிய அமெரிக்காவில் விலங்கு உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியபோதிலும் தீவிரமாக முன்னெடுக்கவில்லை எனச் சிலர் கருதுகின்றனர். இவர்கள், இது விலங்குகள் நல்வாழ்வு குழுவாக செயல்படுகின்றதே தவிர விலங்குகள் உரிமைகள் குழுவாக செயல்படவில்லை எனக் குறை கூறுகின்றனர்.<ref>For Newkirk and Pacheco being the leading exporters of AR, see Garner, Robert. ''Animals, politics, and morality''. Manchester University Press, 1993; this edition 2004, p. 70.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2003326" இருந்து மீள்விக்கப்பட்டது