விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆலமரத்தடி (அறிவிப்புகள்)
ஆலமரத்தடி கிளைகளுக்கு
வரிசை 16:
 
 
== விக்கிப்பீடியா கொள்கைகள், வழிகாட்டல்கள் ==
 
விக்கிப்பீடியா கொள்கைகள், வழிகாட்டல்கள் என்பன பல ஆங்கில விக்கிப்பீயாவில் உள்ளதுபோல் இல்லாமல் அல்லது இற்றைப்படுத்தப்படாமல் உள்ளன. பலவற்றுக்கு ஆ.வி.யை மேற்கோளாகக் கொள்கிறோம். ஆகவே, முக்கியமாகத் தேவையானவற்றை இங்கு பட்டியலிட்டு, பொருத்தமான இடத்தில் உரையாடலாம். சிக்கல் அற்று இருப்பின் உருவாக்கலாம் அல்லது இற்றைப்படுத்தலாம்.
 
'''கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.'''
 
* [[விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்]] - இற்றை தேவை குறிப்பாக பின்வரும் பகுதி [[:en:Wikipedia:Image_use_policy#Image_galleries|விக்கிப்பீடியா படக்காட்சியகமல்ல]] (தொடர்புபட்ட வார்ப்புரு [[en:Template:Too many photos]])
 
--[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 12:55, 19 நவம்பர் 2015 (UTC)
 
:ஆங்கில விக்கியில் இருந்து கொள்கைகளை, வழிகாட்டல்களை பொருத்தமானபடியே இங்கு பயன்படுத்துகிறே. இரண்டு செயற்திட்டங்களின் அளவு, தன்மை வேறு. ஆகவே எல்லாக் கொள்கைகளும் இங்கு பொருந்துவது இல்லை, தேவையானவை இல்லை. தமிழ் விக்கிக்குப் என்ன கொள்வை தேவை, ஏன் தேவை, எப்படிச் செயற்படுத்துவது, எப்படி இங்கு பொருந்தும் என்று பார்த்துச் செய்தல் வேண்டும். குறிப்பான இக் கொள்கையை இற்றைப் படுத்தலாம். படக் காட்சியங்களை பொருத்தமானபடி கட்டுரைகளில் இணைக்கலாம், அல்லது பொதுவகத்துக்கு நகர்த்தலாம். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 15:38, 19 நவம்பர் 2015 (UTC)
 
::[[User:AntanO|Ant<font color="red">a</font>n]], இத்தேவை குறித்து கவனம் ஈர்த்தமைக்கு நன்றிதங்கள் துப்புரவுப் பணி அனுபவத்தில் கண்டுணர்ந்த இத்தகைய மற்ற கொள்கைகளையும் பட்டியல் இடுங்கள். அவை குறித்து உரையாடி தமிழ் விக்கிப்பீடியா வழிகாட்டல்களையும் கொள்கைகளையும் இற்றைப்படுத்துவோம். படக்காட்சியகம் தொடர்பான என் கருத்துகளை [[விக்கிப்பீடியா பேச்சு:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்|இங்கு]] இட்டுள்ளேன்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:43, 20 நவம்பர் 2015 (UTC)
 
:::[[பயனர்:Ravidreams|இரவி]], இங்கு அவ்வப்போது குறிப்பிடுவேன். தற்போதைக்கு [[விக்கிப்பீடியா பேச்சு:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்|இதனை]] இற்றைப்படுத்தலாம். மேலும், ஆ.வி போன்ற வளர்ந்த விக்கிப்பீடியாக்களில் இருந்து பல வழிகாட்டல்களையும் கொள்கைகளையும் உள்வாங்குவது நல்லது. வழிகாட்டல்களும் கொள்கைகளும் ஒரு நேர்த்தியான கலைக்களஞ்சியம் உருவாக்க உதவும். அவற்றை மொழிபெயர்க்க உதவி பெறலாமா? இதுபற்றி விரிவாக உரையாடலாம் என நினைக்கிறேன். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 10:04, 3 திசம்பர் 2015 (UTC)
 
 
 
== 100,000 கட்டுரைகள் ==
 
[[படிமம்:Wpnokake.jpg|right|150px|100,000 கட்டுரைகள்]]
2016 இல் தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை எட்டிவிட திட்டங்களுக்காக முன்மொழிவை இங்கு பதிவிடுகிறேன். நீக்கப்படக்கூடிய கட்டுரைகள் போக 82,200 கட்டுரைகள் உள்ளதாகக் கொள்வோமாயின், 100,000 கட்டுரைகளுக்கு 17,800 கட்டுரைகள் தேவை. ஆகவே, ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 48 கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும். இங்கு கிட்டத்தட்ட 30 முனைப்பான பங்களிப்பாளர்கள் உள்ளனர். ஆனால், தற்போதைய புதிய கட்டுரைகளின் சராசரி 15 கட்டுரைகள். முனைப்பான பங்களிப்பாளர் ஒருநாளைக்கு 2 கட்டுரைகள் உருவாக்கினால் 2016 இல் தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை எட்டிவிடும்.
 
ஒரு மாதம் மட்டுமே இடம்பெற்ற [[விக்கிப்பீடியா:ஆசிய மாதம்|ஆசிய மாதம் 2015]] திட்டம் 265 (நிகர) கட்டுரைகளை பெற்றுளளது. ஆனால், இதன் மொத்தம் சுமார் 275 இருக்கலாம். கிட்டத்தட்ட 9 கட்டுரைகள் ஒரு நாளில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொரும்பாலான (236) கட்டுரைகள் 300 சொற்களைத் தான்டியவை ஆகும். குறுங்கட்டுரைகளா எழுதியிருந்தால் கிட்டத்தட்ட 500 இற்கு மேலான கட்டுரைகளை உருவாக்கியிருக்கலாம்.
 
; என்ன செய்யலாம்?
* முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையக் கூட்டுவது.
* முனைப்பான பங்களிப்பாளர்களை ஒருநாளைக்கு குறைந்தது 2 கட்டுரைகளை எழுத ஊக்குவிப்பது.
:: அதற்காக:
:* குறுகியகால, நீண்ட காலத் திட்டங்களை உருவாகக்குவது/ஊக்குவிப்பது. எ.கா: [[விக்கிப்பீடியா:100விக்கிநாட்கள்]], [[விக்கிப்பீடியா:விக்கி365]], [[:en:Wikipedia:WikiCup]]
:* பிற செயற்பாடுகள்...
 
;நன்மைகள்
* 1000, 2000, ..... கட்டுரைகளை உருவாக்கிய பயனர்கள் பலர் கிடைப்பர்.
* பல...
 
; இல்லாவிட்டால்
* தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை அடைய (தானியங்கிக் கட்டுரைகள் உருவாக்குப்படாதவிடத்து) இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
 
பயனர்களின் கருத்தும் ஆதரவும் இருப்பின், முதற்கட்டமாக 3 மாதங்களுக்காக [[:en:Wikipedia:WikiCup|விக்கி கோப்பையை]] ஆரம்பிக்கலாம். --[[User:AntanO|Ant<span style="color:red;">a</span>n]][[User talk:AntanO|<span style="color:red;"><big>'''O'''</big></span>]] 07:12, 25 திசம்பர் 2015 (UTC)
 
[[User:AntanO|AntanO]] அவர்களே, தங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. த. விக்கியின் 60,000மாவது கட்டுரை 2014 பெப்ரவரி 17 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. எனினும் ஒரு வருடமும் எட்டு மாதங்களும் (20 மாதங்கள்) கடந்த பின்னரே சென்ற ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி விக்கியின் 70,000மாவது கட்டுரை உருவாக்கப்பட்டது. அதற்கும் மூன்று மாதங்களும் நிறைவடையாத நிலையில் 12,000த்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளது, த.விக்கியின் அபரிமித வளர்ச்சியைக் குறித்து நிற்கின்றது. வெகு விரைவிலேயே 100,000கட்டுரைகள் எனும் இலக்கை எட்டிவிடலாம் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை! நன்றி...--[[பயனர்:L.Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:L.Shriheeran|பேச்சு]]) 07:47, 25 திசம்பர் 2015 (UTC)
 
::விக்கிக் கோப்பையை ஆரம்பிக்க எனது ஆதரவை வழங்குகிறேன் அன்டன். 100 விக்கிநாட்கள் மற்றும் 365 விக்கிநாட்கள் என்பன சலிப்பை ஏற்படுத்தக் கூடியன. தனித்துச் செயற்பட வேண்டும். விக்கிக் கோப்பை என்றால் போட்டியாக ஒரு உந்துசக்தியுடன் செயற்பட முடியும். சலிப்பை ஏற்படுத்தாதவாது விக்கிக் கோப்பையை வடிவமைக்கவும் வேண்டும். நன்றி--[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sub>[[User:aathavan jaffna/படங்கள்|<font color="#5150AC" face="Comic Sans MS">'''。◕‿◕。'''</font>]]</sup> <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 09:14, 25 திசம்பர் 2015 (UTC)
:100,000 என்ற இலக்கு நோக்கி இல்லாவிடினும் இத்தகைய போட்டிகள் பயனர்களுக்கு ஓர் உந்துதலாகவும் சலிப்பை அகற்றுவதாகவும் இருக்கும். ஆயினும் போட்டியை மட்டுமே கருத்தில் கொண்டு கட்டுரையாக்கத்தினை தவறாகப் பயன்படுத்துவோரை கண்காணிக்க வேண்டியிருக்கும். மாற்றாக ஆசிய மாதம் போல வெவ்வேறு தலைப்புகளில் மாதவாரியாக போட்டி நடத்தலாம். காட்டாக, சனவரி வரலாறு மாதம், பெப்ரவரி ஒலிம்பிக் போட்டிகள் மாதம், மார்ச்சு அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்/ அரசியல் மாதம், ஏப்ரல் இலக்கியவாதிகள் மாதம், மே பறவைகள்/தாவரங்கள் மாதம் என்றவாறு...அந்தந்த மாதங்களில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஆண்டு நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்கும் அடையாளப் பரிசுகள் தரலாம். --[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 15:32, 25 திசம்பர் 2015 (UTC)
 
::{{like}}--[[User:AntanO|Ant<span style="color:red;">a</span>n]][[User talk:AntanO|<span style="color:red;"><big>'''O'''</big></span>]] 15:34, 25 திசம்பர் 2015 (UTC)
::{{விருப்பம்}}--[[User:maathavan|<span style="color:#00008B;text-shadow:#3FFF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''மாதவன்'''&nbsp; </font></span>]] ([[User talk:maathavan|<span style="color:#DC143C;text-shadow:#00008B 0.2em 0.2em 0.3em">&nbsp;'''''பேச்சு'''''&nbsp; </font></span>]]) 16:08, 25 திசம்பர் 2015 (UTC)
 
: அன்டனுடைய முயற்சியை வரவேற்கிறேன். நிச்சமாக தற்போது கட்டுரைகள் உருவாகும் வேகத்தைக் கூட்டவேண்டியது அவசியமானது. [[:en:Wikipedia:WikiCup|விக்கி கோப்பை]] போன்றவற்றின் மூலம் கட்டுரை உருவாக்கத்தின் வேகத்தைக் கூட்டவும், அதேவேளை பங்களிப்பவர்களைச் சோர்வின்றி உற்சாகமாக வைத்திருக்கவும் முடியும். ஆனால், இதன்மூலம் ஏறத்தாழ 18,000 கட்டுரைகளை உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. [[விக்கிப்பீடியா:100விக்கிநாட்கள்]], [[விக்கிப்பீடியா:விக்கி365]] போன்றவை [[User:aathavan jaffna|ஆதவன்]] எடுத்துக்காட்டியது போல் சலிப்பூட்டக்கூடியவையே. இதில் போதிய பலன் கிடைப்பது கடினம். எனவே 18,000 கட்டுரைகளை ஒரே ஆண்டில் உருவாக்க வேண்டுமானால் இவ்விடயத்தைப் பல வழிகளில் அணுகவேண்டியிருக்கும். குறிப்பாக, ஏற்கெனவே இருக்கும் பங்களிப்பவர்களுக்கும் அப்பால், புதியவர்களின் பங்களிப்புக்களை ஊக்குவிப்பதன் மூலம்தான் இலக்கை சுலபமாக அடையமுடியும்.
: அளவுக்கு அதிகமாகத் தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்குவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்தவொரு கட்டத்திலும் தானியங்கிக் கட்டுரைகள் 10%க்கும் குறைவாக இருப்பது நல்லது என்பது எனது கருத்து. தற்போதைக்கு, அன்டனின் கருத்துப்படி விக்கிக்கோப்பையைத் தொடங்கலாம். இதில் படிப்படியாக பல குழுக்கள் நீக்கப்பட்டுவிடும் ஆதலால், பிற்பகுதியில் உருவாகும் மொத்தக் கட்டுரை எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். வேறு ஏதாவது ஒழுங்குகளின் மூலம் பிற்பகுதியிலும் எல்லோரும் தொடர்ந்து பங்களிப்பதை ஊக்குவிக்க முடியுமா என்று பார்க்கவேண்டும். [[பயனர்:Rsmn|மணியனின்]] முன்மொழிவையும் கருத்தில் கொள்ளலாம். --[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 17:28, 25 திசம்பர் 2015 (UTC)
 
அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவின் '''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை|விக்கிக்கோப்பை]]''' பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு விக்கிக்கோப்பை பற்றிய மேலதிக உரையாடல்களைத் தொடரலாம். அங்கு பெறப்படும் முடிவுகளின்படி இற்றைப்படுத்தலாம். கருத்துக்கள் தேவையான பகுதிகள்: காலம், தலைப்பு, புள்ளி முறை ஆகியன. --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 19:27, 25 திசம்பர் 2015 (UTC)
 
{{விருப்பம்}}--[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 14:07, 27 திசம்பர் 2015 (UTC)
 
புதிய முனைப்பான பயனர்களைப் பெறுதல், ஏற்கனவே உள்ளவர்களைத் தக்கவைத்து ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துதலை உறுதி செய்யும் போது எல்லாம் தரமான கட்டுரை எண்ணிக்கை தானாகவே கூடுவதைக் கண்டிருக்கிறோம். 17,800 கட்டுரைகள் என்றால் மலைப்பாக உள்ளது மாதம் 1,500 கட்டுரைகள் என்றால் இலகுவாக இருக்கிறது. பல மாதங்கள் இயல்பாகவே ஆயிரம் கட்டுரைகள் எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறோம். பொதுவாக, நாம் கட்டுரை எண்ணிக்கை இலக்குகளை வைப்பதில்லை என்றாலும் பல பயனர்கள் தாமாகவே இந்த இலக்கு நோக்கி உழைப்பதாக தங்கள் பயனர் பக்கங்களில் அறிவித்திருக்கும் பின்னணியில், இம்முனைவு ஏற்புடையதாக இருக்கிறது. கூகுள் ஒளியுணரி துணை கொண்டு, நாம் கொடையாகப் பெற்ற [[விக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியம்]] தரும் தலைப்புகளிலும் கட்டுரைகளைக் கொணர்ந்து இற்றைப்படுத்தலாம். இந்த வகையில் முக்கியமான தலைப்புகளில் சில ஆயிரம் கட்டுரைகள் ஏற்றுவதை உறுதி செய்யலாம். தற்போது நடக்கும் [[விக்கிப்பீடியா:உறைவிட விக்கிமீடியர்கள்]] திட்டத்திலும் இதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:14, 27 திசம்பர் 2015 (UTC)
 
== விக்கிப்பீடியா 15 - யாழ்ப்பாண நிகழ்வு ==
 
விக்கிப்பீடியாவின் பதினைந்தாவது பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் கொண்டாடும் நிகழ்வு 2016 சனவரி 16 மாலை 3 மணியளவில் இடம்பெற ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்கள் [https://meta.wikimedia.org/wiki/Wikipedia_15/Events/Jaffna,_Sri_Lanka இங்கு] இற்றைப்படுத்தப்படும். [[பயனர்:மதனாஹரன்|மதனாஹரன்]], [[பயனர்:உமாபதி|உமாபதி]], [[பயனர்:S.kuneswaran|குணேசுவரன்]] ஆகியோர் கலந்துகொள்ள முடியுமா? --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 14:17, 27 திசம்பர் 2015 (UTC)
:{{Ping|Sivakosaran}} யாழ். நகரில் ஒழுங்குசெய்யப்பட்டால், பெரும்பாலும் கலந்துகொள்ள முயல்கின்றேன். --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 14:23, 27 திசம்பர் 2015 (UTC)
::அருமை. வாழ்த்துகள்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:31, 27 திசம்பர் 2015 (UTC)
::வாழ்த்துகள்--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 05:30, 28 திசம்பர் 2015 (UTC)
::[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]], நிகழ்வு மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். சனவரியில் நான் இரண்டு மூன்று நாட்களுக்கு வேறு வேலையாக இலங்கை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், எப்போ என்பது தெரியாது. குறித்த தேதியை அண்டி வந்தால், கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்.-- [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 17:43, 28 திசம்பர் 2015 (UTC)
::: {{விருப்பம்}}. நன்றி [[பயனர்:Ravidreams|இரவி]], [[பயனர்:Nan|நந்தகுமார்]]. [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]], தங்கள் வருகை நிகழ்வை மேலும் சிறப்பாக்கும். [[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]], ஆம், நகரில் தான். பொருத்தமான இடம் கிடைத்ததும் இற்றைப்படுத்துகின்றேன். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 14:28, 29 திசம்பர் 2015 (UTC)
::வாழ்த்துக்கள் [[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]].--[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:சஞ்சீவி சிவகுமார்|பேச்சு]]) 09:18, 31 திசம்பர் 2015 (UTC)
::: {{விருப்பம்}}. நன்றி.--[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 16:01, 1 சனவரி 2016 (UTC)
:சிறப்பாக விக்கி 15 யாழில் நடைபெற வாழ்த்துகிறேன்--[[பயனர்:Kurumban|குறும்பன்]] ([[பயனர் பேச்சு:Kurumban|பேச்சு]]) 21:56, 3 சனவரி 2016 (UTC)
:மகிழ்ச்சியான செய்தி. சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 06:43, 8 சனவரி 2016 (UTC)
 
== டுவிங்கிள் ==
வரி 104 ⟶ 37:
:[[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] அனைத்துக்கும் ஒவ்வொரு கட்டுரை எழுதப் போகிறீர்களா? அல்லது வருவாய் கிராமங்களின் பட்டியல் மட்டும் தரப் போகிறீர்களா? பட்டியல் மட்டும் என்றால் உள்ளிணைப்பு இல்லாமல் பெயரை மட்டும் தாருங்கள். தனித்தனிக் கட்டுரை எழுதுவதாக இருந்தால், ஒரு தனிக் கட்டுரை எழுதுவதற்கு ஏற்ப தகவல்கள் உள்ளனவா? இல்லாவிடில், கிராமம் பற்றிய கட்டுரையில் வருவாய் கிராமத்தின் தகவல்களையும் சேர்க்கலாம்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 04:05, 29 திசம்பர் 2015 (UTC)
 
== விக்கிக்கோப்பை ==
 
[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை|விக்கிக்கோப்பை]] போட்டித் திட்டத்தை கொண்டு செல்ல ஒருங்கிணைப்பாளர்கள் தேவை. உங்கள் பெயர்களை திட்டப்பக்கத்தில் பதிவு செய்து உதவுங்கள். நன்றி --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 21:07, 28 திசம்பர் 2015 (UTC)
 
[[User:AntanO|Ant<font color="red">a</font>n]] அவர்களே என்னாலான உதவிகளை ஒருங்கிணைபாளராக வழங்க முடியும் எனினும் போட்டியில் பங்குபெறுபவர்கள் ஒருங்கிணைப்பாளரா இருக்கலாமா?--[[பயனர்:L.Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:L.Shriheeran|பேச்சு]]) 12:52, 29 திசம்பர் 2015 (UTC)
 
:ஆம், நீங்கள் உருவாக்கிய அல்லது விரிவாக்கிய கட்டுரைகளை இன்னொருவர் மதிப்பீடும்படி பார்த்துக் கொள்வோம். ஆகவே அங்கு நல முரண் இருக்காது. ஆசிய மாதப் போட்டியிலும் அவ்வாறே செய்தோம். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 13:36, 29 திசம்பர் 2015 (UTC)
 
நன்றி--[[பயனர்:L.Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:L.Shriheeran|பேச்சு]]) 01:43, 30 திசம்பர் 2015 (UTC)
 
==tt-ற்ற என்பதைப் பற்றி==
[[பீட்டர் பெர்சிவல்|பீற்றர் பெர்சிவல்]] அவர்கள் தொகுத்து 1861 ஆம் ஆண்டு சென்னையில் பதிப்பிக்கப்பட்ட தனது Anglo-Tamil Dictionary இல் ஆங்கிலத்தின் tt என வருமிடங்களில் தமிழின் ற்ற ஆகிய எழுத்துக்களைப் பிரதியிடுவதைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
 
ற்ற ŗŗ is similar to tt in pattern—as பற்றி paŗŗi; when ற் ŗ is preceded by ன் n, it has very nearly its natural power—as கன்று kanŗu, பன்றி panŗi; when we mute before a consonant, it has the sound of the cerebral ţ—as கற்பனை kaŗpanai.
 
--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 03:11, 31 திசம்பர் 2015 (UTC)
 
:{{விருப்பம்}} {{Ping|Fahimrazick}} இலங்கையின் சில பகுதிகளில் ற்ற என்பதை tra என்றும் பலுக்குவதுண்டா? தங்கள் பழைய தொகுப்புகளில் அவ்வாறு கூறியிருக்கிறீர்கள். பாடநூல்களில் Nitrite-நைத்திரைற்று என்றே எழுதப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலும் ற்ற-tta என்றே பலுக்கப்படுகின்றது. --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 03:17, 31 திசம்பர் 2015 (UTC)
 
ற்ற என்பதை tra என்று மொழிவதே முறை. ஆனால் ஆங்கிலத்தின் tt என்பதைத் தமிழில் ற்ற என்றெழுதுவதே பொருத்தமென்கிறார் பெர்சிவல். அப்போது தமிழில் ட்ட என்று மொழியாமல் அதையும் ற்ற (tra) என்றே மொழிய வேண்டும். இம்முறையே இலங்கையில் பின்பற்றப்படுகிறது. tt என்பதை ட்ட என்றெழுதுவது தவறன்று. இவ்விரண்டுக்குமிடையே சிறிது ஒலிப்பு நுணுக்கங்கள் காணப்படுகின்ற போதிலும் தமிழில் அவற்றைக் கருத்திலெடுக்க வேண்டியதில்லை. மாறாக நாம் ஓரிடத்தில் ஒரு மாதிரியும் மற்றோரிடத்தில் இன்னொரு மாதிரியும் எழுதிக் குழப்பக் கூடாது. அதனாலேயே நான் இலங்கை வழக்கைப் பின்பற்றுகிறேன். ட்ட என்பதை ஒரு சிலர் dd என்று மொழிவதுண்டு. ஆனால் அதற்கு எந்த விதியுமில்லை. அவ்வாறே ற் என்பதை ர் எனப் பிழையாக வாசிப்போருமுளர். அத்துடன் tr என்பது தமிழில் ற்ற என்று மாத்திரமே வர முடியும். சிலர் எழுதுவது போல் ட்ர (பெட்ரோல்) என்பது போன்று எழுதுவது தமிழ் முறைக்கு ஒவ்வாது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 03:32, 31 திசம்பர் 2015 (UTC)
:ட்ர என்பது ஒவ்வாததே. இலங்கையில் traஉம் ற்ற என்பதால் குறிக்கப்படுகின்றது. ட்ட என்பத ttaஇற்கு நெருங்கிய ஒலியே. tta அன்று. tta என்பதைக் குறிப்பதற்கு, சொல்லுக்கேற்ப, ற்ற அல்லது ட்டவைப் பயன்படுத்தலாம். --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 03:46, 31 திசம்பர் 2015 (UTC)
==உதவி==
[[வாழைப்பழம்]] (Banana), [[வாழை]] (Musa acuminata) அப்படியென்றால் Musa × paradisiaca என்ற அறிவியல் வார்த்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்.--[[பயனர்:Muthuppandy pandian|Muthuppandy pandian]] ([[பயனர் பேச்சு:Muthuppandy pandian|பேச்சு]]) 06:07, 2 சனவரி 2016 (UTC)
#[[வாழை (முசா × பாரடைசியாக)]] என்று கட்டுரைக்கு தலைப்பு இடுங்கள். பின்பு கட்டுரையைத் தொடங்கும் போது, வழமையாக நாம் தொடங்குவது போல, பின்வருமாறு கட்டுரையைத் தொடங்கவும். '''முசா × பாரடைசியாக''' (தாவரவியல் பெயர்: Musa × paradisiaca) என்பது வாழையின் கலப்பினங்களில் ஒன்று. இது '' '''Musa''' acuminata'' என்ற நாட்டு இனச் சிற்றனத்தையும், ''Musa '''paradisiaca''' '' என்ற காட்டு இன வாழையினத்தையும் கொண்டு கலப்பின முறையில் உருவாக்கப்பட்ட வாழை மரமாகும். இந்த காட்டு இனத்தின் தாவரவியல் பெயர், ''Musa balbisiana'', என தாவரவியல் சமூகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய வகைப்பாட்டியல் முறையை, விக்கியினங்களில், [https://species.wikimedia.org/wiki/Musa_%C3%97_paradisiaca இங்கு] உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது பழைய தாவரவியல் வகைப்பாட்டு முறை.இதுபோன்ற தாவரவியல் கட்டுரையை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். [[:en:APG III system]] என்பதை மொழிபெயரப்பு செய்யுங்கள். பல இலட்சகணக்கான தாவரங்களுக்கு அதுவே தற்போதுள்ள நடைமுறை தாவரவியல் வகைப்பாடு ஆகும்.கூகுளின் ஒலிபெயர்ப்பை விட, [http://www.quillpad.in/index.html#.Voh7uV5TtyR இத்தளத்தின்] ஒலிப்பெயர்ப்பு 90%சரியாக இருக்கும். மீதமுள்ள10% ஒலிபெயர்ப்பை நாம்தான் சரிசெய்யணும். வணக்கம். --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 01:41, 3 சனவரி 2016 (UTC)
#முசா × பாரடைசியாக்கா என்று தலைப்பிடுவது சரியாக இருக்கும். --கி.மூர்த்தி 01:52, 3 சனவரி 2016 (UTC)
#:நானும் உங்களைப் போன்றே, முதலில் எண்ணினேன். ஆனால், வாழையில் பல சிற்றினங்கள் உள்ளன. நாம் தேடுசாளரத்தில் தேடும் போது, வாழை என்று அடித்தால், அதன் கீழே இதுவும் தோன்ற வாய்ப்புண்டு. தாவரவியல் பெயரில் தேடுபவர் குறைவே, அப்படியே தேடினாலும், மற்ற சிற்றனங்களை, தேடு சாளரத்திலேயே காண இயலாது போகிவிடும் என்பதால் மேற்கண்ட பெயரை பரிந்துரைத்தேன். ஒரு கட்டுரயைத் தேடி வருபவர், அவர் தேடும் போது, நமது கட்டுரை வளத்தையும் காண வைக்க வேண்டியது, நமது கடமையாக எண்ணுகிறேன். --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:00, 3 சனவரி 2016 (UTC)
 
==பயனர்:மதனாகரன்==
*[http://onlineuthayan.com/news/6097 இந்தச் செய்தியின்]படி சிறப்புப் பெறுபேறு பெற்றவர் [[பயனர்:மதனாஹரன்]] அல்லவா? உறுதிப்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன். பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்! [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 08:36, 3 சனவரி 2016 (UTC)
:[[பயனர் பேச்சு:மதனாஹரன்|இங்கு நகர்த்தப்பட்டுள்ளது]] --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 04:00, 4 சனவரி 2016 (UTC)
 
== Wikimania 2016 Scholarships - Deadline soon! ==
 
:{{int:Please-translate}}
A reminder - applications for scholarships for Wikimania 2016 in Esino Lario, Italy, are closing soon! Please get your applications in by January 9th. To apply, visit the page below:
:*[https://wikimania2016.wikimedia.org/wiki/Scholarships Wikimania 2016 Scholarships]
[[User:PEarley (WMF)|Patrick Earley (WMF)]] via [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 01:49, 5 சனவரி 2016 (UTC)
<!-- Message sent by User:PEarley (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:PEarley_(WMF)/Mass_Message_-_large&oldid=15209973 -->
 
== மயூரநாதனுக்கு இயல் விருது ==
 
மயூரநாதன், 2015ஆம் ஆண்டுக்கான [[இயல் விருது|இயல்விருதினைப்]] பெறுகிறார். வாழ்த்துகள், [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]]. பயனர்கள் தங்கள் வாழ்த்துகளை [[பயனர் பேச்சு:Mayooranathan#இயல் விருது|அவரது பேச்சுப் பக்கத்தில்]] தெரிவிக்க வேண்டுகிறேன். விவரங்களுக்குப் பார்க்க - http://www.tamilliterarygarden.com/ --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:08, 6 சனவரி 2016 (UTC)
 
:மகிழ்ச்சியான செய்தி. மீண்டும் மயூரநாதனுக்கு எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது அரும்பணி பல்லாண்டுகாலம் தொடரவேண்டுகிறேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 06:46, 8 சனவரி 2016 (UTC)
 
== தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கிய நூல்களுக்குப் பொதுக்கள உரிம அறிவிப்பு ==
 
[[படிமம்:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration-Tamil-Version.jpg|200px|thumbnail|வலது|தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கும் நூல்களைப் பொதுக்கள உரிமத்தில் வெளியிடும் அறிவிப்பு (ஆங்கிலத்தில் அறிவிப்பு [[:c:File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg|இங்கே]])]]
தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கிய நூல்களுக்குப் பொதுக்கள உரிம அறிவிப்பினை தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிட்டிருக்கிறது. [[விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்|த. இ. க. உடனான கூட்டு முயற்சியின்]] முக்கிய விளைவுகளில் ஒன்றாக இதனைக் கருதலாம். இதன் மூலம் ஏறத்தாழ 4000+ நூல்களை விக்கிமூலத்தில் பதிவேற்றிப் பேண முடியும். இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த [[பயனர்:Thamizhpparithi Maari|தமிழ்ப்பரிதிக்கும்]] [[பயனர்:Info-farmer|தகவல் உழவனுக்கும்]] நன்றி. எனக்குத் தெரிந்து, வேறு எந்த ஒரு நாட்டிலும் நூல்களை நாட்டுடைமையாக்கல் என்ற இத்திட்டம் இல்லை. ஆனால், நாம் 1950களிலேயே இதனை முன்னெடுத்துள்ளோம். எனக்குத் தெரிந்து, வேறு எந்த ஒரு (இந்திய மாநில) அரசும் இவ்வாறான ஒரு திட்டத்துக்குப் பொதுக்கள அறிவிப்பு வெளியிட்டதும் இல்லை. இம்முயற்சியை வாழ்த்திப் பாராட்டுவதன் மூலம், இது போன்ற இன்னும் பல முன்னோடி முனைவுகளைத் தமிழ் விக்கிப்பீடியர் சமூகம் மேற்கொள்ள முடியும். தமிழ் இணையக் கல்விக் கழகத்துக்கு நமது நன்றி உரித்தாகுக. அறிவிப்பு பின்வருமாறு:
 
தமிழ் இணையக் கல்விக்கழகம்,
 
சென்னை,
 
திசம்பர் 18, 2015
 
தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் என்பது தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட சான்றோர்களின் நூல்களின் பதிப்புரிமையை முறைப்படி பெற்று பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதைக் குறிக்கும்.
 
இந்நூல்களை முழுமையான பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கும் பரப்புவதற்கும் இவ்வாக்கங்கள் யாவும் கட்டற்ற ஆக்க உரிமங்களின் கீழ் கிடைப்பது இன்றியமையாதது ஆகும்.
 
எனவே, தமிழ்நாடு அரசு இது வரை நாட்டுடைமை ஆக்கியுள்ள அனைத்து நூல்களும் இனி நாட்டுடைமை ஆக்கப் போகும் அனைத்து நூல்களும், அவை இந்தியப் பதிப்புரிமைச் சட்டம், 1957 மற்றும் இந்தியப் பதிப்புரிமை விதிகள், 1958 ஆகியவற்றின் படி பதிப்புரிமை காலாவதி ஆகாதிருக்கும் நிலையில், பொதுக்கள உரிமத்தின் கீழ் ( CC0 1.0 Universal (CC0 1.0) Public Domain Dedication விவரங்களுக்கு https://creativecommons.org/publicdomain/zero/1.0/ பார்க்கவும் ) வெளியிடப்படுகின்றன. இந்நூல்களின் முழுமையான பட்டியலை http://tamilvu.org/library/nationalized/html/books-list.htm
என்ற வலைமுகவரியில் காணலாம்.
 
--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:55, 12 சனவரி 2016 (UTC)
 
:{{விருப்பம்}} மிகவும் பயனுள்ள செயல். இதற்காகச் செயற்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 13:00, 12 சனவரி 2016 (UTC)
 
:: பெரும் பணி. இனியதாக நிறைவேற்ற உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 17:14, 12 சனவரி 2016 (UTC)
 
== தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் கட்டற்ற ஆக்கங்கள் ==
 
[[படிமம்:Tamil-Virtual-Academy-Copyright-Declaration.jpg|200px|thumbnail|வலது|தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் கட்டற்ற ஆக்கங்கள்]]
தமிழ் இணையக் கல்விக்கழகம் தனக்கு பதிப்புரிமை உள்ள ஊடக வளங்கள், கணிமை வளங்களை கட்டற்ற ஆக்க உரிமங்களின் கீழ் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. [[விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்|த. இ. க. - தமிழ் விக்கிப்பீடியா கூட்டு முயற்சி]]யின் நல்விளைவுகளில் ஒன்றாக இதனைக் கருதலாம். இதன் மூலம், மற்ற பல கல்வி சார் நிறுவனங்களைக் கட்டற்ற ஆக்க உரிமங்களைப் பயன்படுத்தக் கோர தக்க முன்மாதிரி கிட்டியுள்ளது. இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த [[பயனர்:Thamizhpparithi Maari|தமிழ்ப்பரிதிக்கும்]] [[பயனர்:Info-farmer|தகவல் உழவனுக்கும்]] நன்றி. எனக்குத் தெரிந்து, வேறு எந்த ஒரு இந்தியக் கல்வி நிறுவனமும் இவ்வாறு தன்னுடைய முழு ஆக்கங்களுக்கும் கட்டற்ற ஆக்க உரிம அறிவிப்பு வெளியிட்டது இல்லை. இம்முயற்சியை வாழ்த்திப் பாராட்டுவதன் மூலம், இது போன்ற இன்னும் பல முன்னோடி முனைவுகளைத் தமிழ் விக்கிப்பீடியர் சமூகம் மேற்கொள்ள முடியும். தமிழ் இணையக் கல்விக் கழகத்துக்கு நமது நன்றி உரித்தாகுக.அறிவிப்பு பின்வருமாறு:
 
தமிழ் இணையக் கல்விக்கழகம்,
 
சென்னை,
 
திசம்பர் 18, 2015
 
தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழக அரசால் நிறுவப்பெற்ற தன்னாட்சி நிறுவனம் ஆகும்.
 
உலகெலாம் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்கவும், தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்து, பயிற்சியளித்துப் பயன்பாட்டை பெருக்குதலும் இணையவழி அளிப்பதும் இதன் நோக்கமாகும்.
 
இந்நோக்கத்தை எட்டுவதற்குத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஆக்கங்கள் யாவும் அனைவரும் எளிதில் பயன்படுத்தவும் மேம்படுத்தவும் பகிரவும் தகுந்த வகையில் கட்டற்ற ஆக்க உரிமங்களின் கீழ் கிடைப்பது இன்றியமையாதது ஆகும்.
 
எனவே, தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்குப் பதிப்புரிமை உள்ள அனைத்து ஊடக ஆக்கங்களும் (உரை, படிமங்கள், ஒலிக்குறிப்புகள், நிகழ்படங்கள், தரவு முதலியன) படைப்பாக்கப் பொதுமங்கள் ஆக்குநர்சுட்டு-பகிர்வுரிமை 4.0 ( Creative Commons Attribution ShareAlike 4.0 license (CC BY-SA 4.0) விவரங்களுக்கு https://creativecommons.org/licenses/by-sa/4.0/deed.en பார்க்கவும் ) என்னும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகின்றன. இத்தகைய ஆக்கங்களின் முழுமையான பட்டியலை http://tamilvu.org/coresite/html/free-content-media.htm
என்ற வலைமுகவரியில் காணலாம்.
 
தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்குப் பதிப்புரிமை உள்ள அனைத்து கணிமை ஆக்கங்களும் (மென்பொருள், நிரல்கள் முதலியன) குனூ பொது மக்கள் உரிமம் 2.0 (அல்லது அதன் புதிய பதிப்புகள்) (GNU General Public License Version 2 or later (GPLv2+) விவரங்களுக்கு https://www.gnu.org/licenses/old-licenses/gpl-2.0.html பார்க்கவும்) கீழ் வெளியிடப்படுகின்றன. இத்தகைய ஆக்கங்களின் முழுமையான பட்டியலை http://tamilvu.org/coresite/html/free-software.htm என்ற வலைமுகவரியில் காணலாம்.
 
இவ்வாக்கங்களைப் பகிரும் போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்ற நிறுவனப்பெயரை ஆக்குநர்சுட்டாகக் குறிப்பிட வேண்டும்.
 
--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 13:09, 12 சனவரி 2016 (UTC)
:மிக்க மகிழ்ச்சி. இதற்கு முன்னின்று உழைத்த அனைவருக்கும் நன்றி. --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 16:10, 12 சனவரி 2016 (UTC)
:இது ஒரு பெரும் வளமாக இருக்கும். --[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:சஞ்சீவி சிவகுமார்|பேச்சு]]) 06:48, 13 சனவரி 2016 (UTC)
 
== உதவி தேவை ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது