எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 54:
===இன் பாறீ மெத்தேறீய (In Pari Materia)===
'பாறீ மெத்தேறீய' என்றால் 'ஒருமித்த நிலை' எனப் பொருள்படும். மாக்ஸ்வெல்-ன் கூற்றின்படி எழுத்துருச் சட்டங்கள் ஒரே நபர்கள், பொருட்கள் அல்லது வகுப்பைச் சார்ந்ததாக இருக்கின்றப்போது ஒருமித்த நிலையிலுள்ளன (In pari materia) எனக்கூறலாம். அவைகள் பெரும்பாலும் ஒரேமாதிரியாக இருக்கும். அதாவது ஒரேக் காரியம் தொடர்பான [[ஆளும் மன்றச் செய்யுள்|செய்யுள்களில்]] பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே சொற்கள் அல்லது சொற்த்தொடர்கள் ஒரேப் பொருளைக் கொண்டதாகவே இருக்கும். அவ்வாறு இருப்பினும் ஒரேச் சொல் அல்லது சொற்த்தொடர் மாறுபட்ட எழுத்துருச் சட்டங்களில் மாறுபட்டப் பொருளைக் கொண்டதாகவும் இருக்கலாம்.
===ரெட்டேண்டோ சிங்குலா சிங்கூலிஸ் (Reddendo Singula Singulis)===
இந்த கோட்பாட்டில் காணப்படும் விதியின்படி எழுத்துருச் சட்டத்தின் சரியான பொருள்விளக்கத்திற்கு சொற்களின் ஒழுங்கமைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சொற்களின் ஒழுங்கமைப்பு தெளிவாகவும், பன்பொருளற்றதாகவும் இருப்பின் பொருள்விளக்க ஆய்வு தேவையற்றதாகும்.
 
ஓர் எழுத்துருச் சட்ட ஏற்பாட்டின் அல்லது வேறு எழுத்துருச் சட்டங்களின் பகுதியிலுள்ள சொற்களை மற்றுள்ளப் பகுதிகளில் அதற்கு தகுந்தக் குறிக்கோள்களுக்கு முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சொற்களைப் பகுத்து வாசித்தறிய வேண்டும். எழுத்துருச் சட்டங்களில் 'முறையே' (Respectively), அல்லது 'பொருந்தக்கூடிய (as applicable), அல்லது, 'சூல்நிலைக்கேற்ப' (as the case may be) போன்றச் சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ள இடங்களில் இந்த விதிப் பொருந்தக்கூடியதாகும்.
 
எழுத்துருச் சட்டங்கள் முறிவும் நிறுத்தமும் இல்லாது வாசிக்கப்பட்டால் அதில் தெளிவு இருக்காது என கிரவ்ஃபாற்ட் பிரபு (Lord Crawford) குறிப்பிட்டுள்ளார். இந்த விதியின்படி ஒரு வாக்கியத்தின் ஏதேனும் குறிப்பிட்ட கிளையை சார்ந்துள்ளச் சொற்களை அதன் அமைப்பில் இருந்து எடுத்து பகுத்து வாசிக்க வேண்டும்.
 
இந்த விதி பின்வரும் எடுத்துக்காட்டினால் விளக்கிக் கூறமுடியும். "யார் வேண்டுமானாலும் வாளை அல்லது துப்பாக்கியை உருவவோ அல்லது நிரப்பவோ முடியும்." இந்த உரையில் 'உருவுதல்' என்பது வாளிற்கும், 'நிரப்புதல்' என்பது துப்பாக்கிக்கும் தான் பொருந்தும். ஏன் என்றால் இங்கு துப்பாக்கியை உருவவும் முடியாது, வாளை நிரப்பவும் முடியாது.
 
==மேற்கோள்==