"பவணந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: '''பவணந்தி''' அல்லது '''பவணந்தி முனிவர்''' என்பவர், இடைக் காலத் [[தமிழ் இலக்கண...)
 
'''பவணந்தி''' அல்லது '''பவணந்தி முனிவர்''' என்பவர், இடைக் காலத் [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூலான [[நன்னூல்|நன்னூலை]] எழுதியவராவார். இவர் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் [[மூன்றாம் குலோத்துங்க சோழன்]] காலத்தவர் என்பது சில வரலாற்றாய்வாளர் கருத்தாகும். இவரது பெயர் மற்றும் இவரது நூலிலுள்ள சில கருத்துக்களையும் சான்றாகக் கொண்டு இவர் [[சமணம்|சமண]] சமயத்தைச் சேர்ந்தவர் எனத் துணியலாம்.
 
 
: திருந்திய செங்கோற் சீய கங்கன்
: பன்னருஞ் சிறப்பிற் பவ ணந்தி
: என்னு நாமத் திருந்தவத் தோனே
 
 
என்பது நன்னூலுக்கு இவர் எழுதிய [[சிறப்புப் பாயிரம்|சிறப்புப் பாயிரத்தின்]] இறுதி வரிகள். இதில் இவர் பற்றிய சில தகவல்கள் உள்ளன. இதிலிருந்து, நன்னூல் எழுதுவதற்கு இவருக்குத் தூண்டுதலாக இருந்தவன் சீயகங்கன் என்னும் [[சிற்றரசன்]] ஒருவனாக இருக்கலாம் என்பது ஆய்வாளர் சிலரது கருத்து. ''பொன்மதிற் சனகை'' என்பதில் இருந்து இவர் சனகாபுரி என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்டாலும், [[கொங்கு நாடு|கொங்கு நாட்டுச்]] சனகாபுரியா, [[தொண்டை நாடு|தொண்டை நாட்டுச்]] சனகாபுரியா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இப் பாயிரத்தில் குறிக்கப்பட்டுள்ள ''சன்மதி முனி'' என்பவரே இவரது குரு என்றும் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/200417" இருந்து மீள்விக்கப்பட்டது