நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
===மொழிநடையும் கல்வெட்டின் காலமும்===
நாடுகாட்டு பரவெணிக் கல்வெட்டு ஒரு இலக்கிய வகையைச் சேர்ந்ததாக உள்ளது. மத்திய காலப் பகுதியிலே இந்த வகையான இலக்கியம் இலங்கைத் தமிழரிடையே, அதுவும் கிழக்கிலங்கை மற்றும் வன்னிப் பகுதிகளிலுமே பெரும் வளர்ச்சியடைந்திருந்தது. '''கோணேசர் கல்வெட்டு''', '''வையா''' என்னும் நூல்கள் கல்வெட்டு எனப்படும் இலக்கிய வகையிலே பிரசித்தம் பெற்று விளங்கின. திருகோணமலை, யாழ்ப்பாணம் (அடங்காப்பற்று) ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் வரலாறுகளை மேற்படி நூல்கள் கூறுவதுபோல், மட்டக்களப்பின்மட்டக்களப்புத் தென்பகுதியின் வரலாற்று அம்சங்களை இக்கல்வெட்டு பொருளாகக் கொண்டுள்ளது. நாடுகாட்டு பரவெணிக் கல்வெட்டு ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் பதிப்பிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மட்டக்களப்பு மான்மியத்தில் காணப்படும் சான்றுகள், நாடுகாட்டுப் பகுதியிலுள்ள மரபுவழிக் கதைகள், அங்குள்ள தொல்பொருள் சான்றுகள் ஆகியவைகளின் அடிப்படையில் நாடுகாட்டு பரவெணிக் கல்வெட்டிலுள்ள கதைகள் ஆராயப்படல் வேண்டும்.
 
இதிலே அதன் ஆசிரியரைப் பற்றியோ, அது இயற்றப்பட்ட காலத்தைப் பற்றியோ எந்தக் குறிப்பகளும்குறிப்புகளும் காணப்படவில்லை. புலியன் தீவில் '''உலவிசி''' என்ற பறங்கி வாழ்ந்தமை பற்றிக் கூறப்பட்டுள்ளமையினால், இது இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி நடைபெற்றபோது எழுதப்பட்டிருக்கின்றது என்பது உறுதியாகின்றது. கண்டி அரசன் மற்றும் வன்னிய இராசாக்கள் பற்றிக் குறிப்புகள் உள்ளதால், கண்டி அரசனின் மேலாதிக்கம் மட்டக்களப்பப் பிரதேசத்தில் நிலவிய காலத்து வரலாற்று அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளதாகக் கொள்ளலாம்.
 
மட்டக்களப்பு மான்மியத்தின் மொழிநடைக்கும் கல்வெட்டின் மொழிநடைக்கும் இடையிலே பாரிய வேறுபாடுகள் உள்ளன. மட்டக்களப்பு மான்மியத்தின் ஒரு பகுதி வசனநடையிலும், ஏனைய பகுதிகள் செய்யுள் வடிவிலும் அமைந்துள்ளன. அது காலத்துக்குக் காலம் பல்வேறு ஆசிரியர்களினால் எழுதப்பட்ட கவித்திரட்டுக்களையும், உரைகளையும் கொண்டதொரு தொகுப்பாகும்.<ref>மட்டக்களப்பு மான்மியம், எப்.எக்ஸ்.சி.நடராசா, கொழும்பு - 1962</ref> ஆனால் கல்வெட்டை ஒருவரே எழுதியுள்ளார். வரலாற்று அம்சம் பொருந்திய மரபு வழியான கதைகளே அதில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு மான்மியத்தின் மொழிநடை கல்வியறிவு படைத்த புலவர்களின் இலக்கண இலக்கிய மரபுகள் அமைந்த செந்தமிழ் வழக்காகும். ஆனால் கல்வெட்டில் ழகர, ளகர மயக்கங்கள் அதிகமாகவும், இரு சொற்கள் சரியான முறையில் புணர்த்தி எழுதப்படாமல், முதற்சொல்லின் இறுதி எழுத்தை இரட்டிப்பாக்கி பாமரர் வழக்கில் எழுதப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மான்மியம் கிழக்கிலங்கைத் தமிழர்களின் தேசிய உணர்ச்சியின் விளைவாக எழுந்ததாகும். வெருகல் ஆற்றிலிருந்து பூமுனை வரையிலான பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்கள் மொழி, சமுதாய வழமை, பாரம்பரியம் ஆகியவற்றினால் ஒன்றுபட்டிருந்தனர். இந்த ஒற்றுமையும், கண்டி இராச்சியத்தில் வாழ்ந்த சிங்களவர்களோடு இருந்த வேற்றுமையும், கிழக்கிலங்கைத் தமிழர்களின் மத்தியில் ஒரு வகையான தேசிய உணர்வினை ஏற்படுத்தின. கண்டிச் சிங்கள மன்னர்கள் கிழக்கிலங்கைத் தமிழர்களின் தனித்துவத்தையும், சிறப்புரிமைகளையும் ஒப்புக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு, பிரதேச நிர்வாகத்தில் சுதந்திர ஆதிக்கம் செலுத்திய வன்னியர்களின் ஆட்சி ஒர் எடுத்துக் காட்டாகும். பூகோள அமைப்பு, மொழிவழிப் பாரம்பரியம், அரசியல் வரலாறு ஆகியவற்றைக் கொண்ட தேசிய உணர்வினைப் பிரதிபலிப்பதே "மட்டக்களப்புத் தேசம்" என்னும் கோட்பாடாகும். இதன் வரலாற்றை வகுத்துக்கொள்ள எழுதப்பட்டதே [[மட்டக்களப்பு மான்மியம்]] என்னும் மட்டக்களப்பின் பூர்வீக சரித்திரமாகும். ஆனால் மட்டக்களப்பின் பழைய பிரிவுகளில் ஒன்றான நாடுகாட்டுப் பற்று, அதன் பிரதேச உணர்ச்சியின் விளைவாகவே "நாடுகாட்டுப் பரவெணிக் கல்வெட்டு" எழுதப்பட்டது எனக் கருதலாம்.
 
===கல்வெட்டில் உள்ள தகவல்கள்===
"https://ta.wikipedia.org/wiki/நாடு_காட்டுப்_பரவணிக்_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது