நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
==கல்வெட்டில் உள்ள தகவல்கள்==
சீத்தவாக்கையில் இருந்து இங்கு குடிபெயர்ந்த நிலமையிறாளை பற்றிய கதையுடன் கல்வெட்டு ஆரம்பமாகின்றது. மட்டக்களப்பில் வசிக்கின்ற முஸ்லிம்கள் சிலரின் முன்னோர்கள் சீத்தவாக்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது மரபு. ஆனால் இக்கல்வெட்டில் சிங்களவர்களையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிலமையிறாளை, அவரின் மனைவி கிரியெத்தனா, மகன் இராசபக்ச முதலியார் மற்றும் வேறு சிலரும் சீத்தவாக்கையிலிருந்து குடிபெயர்ந்து 'தளவில்' என்னுமிடத்திலே குடியிருந்தாரகள். அவர்கள் வரும்போது அவர்களின் கால்நடைகள், சொத்துக்கள், அடிமைகள் மற்றும் வண்ணார், சங்கரவர், தட்டார், கிண்ணறையர், ஒலியர் ஆகியவர்களையும் கூட்டிக்கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகின்றது. பின்பு இராசபக்ச முதலியாரும் அவரது உறவினர்களும் இறக்காமம் என்னுமிடத்துக்குக் குடிபெயர்ந்தார்கள். கல்வெட்டில் வருகின்ற கதைகள் யாவும் இராசபக்ச முதலியாரோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. அவர் கண்டி அரசனோடு தொடர்புள்ளவராகவும், இராச முத்திரைகள் பெற்றவராகவும் காணப்படுகின்றார். அவர் பட்டம் வழங்கப்பட்ட முதலியாகவும், அவரது நெருங்கிய உறவினர் காளாஞ்சி அப்புகாமி பட்டம் பெறாத முதலியாகவும் குறிப்பிடப்படுகின்றனர். இவற்றை நோக்கும் போது சீத்தவாக்கையிலிருந்து நாடுகாட்டுக்கு குடிபெயர்ந்த ஒரு சிங்களக் குடும்பம் மரபு வழியாகவே கண்டி அரசிலே உயர்பதவிகளைப் பெற்றிருந்தவர்கள் என்பது புலனாகிறது. முதலாம் இராசசிங்கனுடைய ஆட்சிக்காலத்தில் இக்குடும்பத்தவர்கள் அதிகாரிகளாக மட்டக்களப்பப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டிருக்கலாம். கண்டி அரசனுடைய பெயரோ, அவனுடைய நடவடிக்கைகளோ, கால வரையறைகளோ கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லையாகையால், அதில் இடம்பெற்றிருக்கின்ற வரலாற்று நிகழ்ச்சிகளை ஒரு கால வரையறைக்குள் சேர்க்க முடியாதுள்ளது.
 
கல்வெட்டிலே நாடுகாட்டில் அதிகாரம் செலுத்திய வன்னியர்களைப் பற்றியும் சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. சிங்காரவத்தையிலே ஏழு வன்னியர்கள் இருந்ததாகவும், அவர்கள் திருக்கோயில் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இது, நாடுகாட்டுப் பகுதியிலே சிங்காரவத்தை வன்னியர்களைப் பற்றி நிலவி வருகின்ற ஐதிகங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளன.<ref>Monograph of the Batticaloa District, P.10</ref> கோவில்மேடு, பட்டிமேடு ஆகிய இடங்களிலுள்ள அம்மன் கோவில்களைப் பற்றிய சில கதைகளும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. பட்டிமேட்டிலிருந்து காரைதீவுக்கு அம்மன் சென்றதாகவும் கூறப்பட்டிருக்கின்றது. சீத்தாவாக்கையிலிருந்து அம்மன் பட்டிமேட்டுக்குச் சென்றதாக'''பொற்புறா வந்த காவியம்'''கூறுகின்றது.<ref>மகாமாரித்தேவி திவ்வியகரணி, சி.கணபதிப்பிள்ளை, யாழ்ப்பாணம்</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாடு_காட்டுப்_பரவணிக்_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது