நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
கல்வெட்டிலே நாடுகாட்டில் அதிகாரம் செலுத்திய வன்னியர்களைப் பற்றியும் சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. சிங்காரவத்தையிலே ஏழு வன்னியர்கள் இருந்ததாகவும், அவர்கள் திருக்கோயில் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இது, நாடுகாட்டுப் பகுதியிலே சிங்காரவத்தை வன்னியர்களைப் பற்றி நிலவி வருகின்ற ஐதிகங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளன.<ref>Monograph of the Batticaloa District, P.10</ref> கோவில்மேடு, பட்டிமேடு ஆகிய இடங்களிலுள்ள அம்மன் கோவில்களைப் பற்றிய சில கதைகளும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. பட்டிமேட்டிலிருந்து காரைதீவுக்கு அம்மன் சென்றதாகவும் கூறப்பட்டிருக்கின்றது. சீத்தாவாக்கையிலிருந்து அம்மன் பட்டிமேட்டுக்குச் சென்றதாக '''பொற்புறா வந்த காவியம்''' கூறுகின்றது.<ref>மகாமாரித்தேவி திவ்வியகரணி, சி.கணபதிப்பிள்ளை, யாழ்ப்பாணம்</ref>
 
நாடுகாட்டிலே இருந்த பல ஊர்கள், வயல்வெளிகள் ஆகியவற்றின் பெயர்களும் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. பட்டிய வத்தவளை, வாடிமுனை, பாமங்கை, கல்மடு, கோவில்மேடு, பட்டிமேடு, மேட்டுவெளி, பள்ளவெளி, வேகாமம், வலிப்பத்தான்சேனை, கடவத்தைவெளி, திவிளானைவெளி, பொத்தானைவெளி, வம்மியடி வயல், பட்டிப்பளை, அணுக்கன் வெளி, சிங்காரவத்தை, நாதனை ஆகிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேபோல் நாடுகாட்டுப் பற்றில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களையும், அவர்களது தலைவர்களையும் பற்றிய குறிப்புக்களும் கல்வெட்டில் காணப்படுகின்றன. பொன்னாச்சிகுடி, வரிசைநாச்சிகுடி, முகாந்திர நாச்சிகுடி, மாலைகட்டிகுடி, கிணிக்கருதன்குடி, பணியவீட்டுக் குடி ஆகிய ஏழு வகைக்வகை முஸ்லிம் குடிகளும் நாடுகாட்டிலே வாழ்ந்தனர் என்றும், அவர்கள் அனைவருக்கும் பொன்னாச்சிகுடியே தலைமை என்றும் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது.<ref>Monograph of the Batticaloa District PP. 90-95</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாடு_காட்டுப்_பரவணிக்_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது