பயனர் பேச்சு:Pollachi nasan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,408 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
(→‎நல்வரவு: வருக, வருக! விக்கி ஆணிப்பொன்னாய் ஆவது தங்களைப்போன்ற நல்லறிஞர்களின் பங்களிப்பால்த)
 
:ஐயா, வணக்கம்! உங்கள் வருகை கண்டு நான் மிக மகிழ்கிறேன். தமிழம் இணையத்தளத்தைத் தாங்கள் நடத்தும் பாங்கைக்கண்டு வியப்பவர்களில் நானொருவன். அண்மையில் உங்கள் தளத்தில் நீங்கள் விக்கியைப் பற்றி எழுதியிருந்ததைக் கண்டு தங்களுக்கு ஒரு மடல் விடுத்து அழைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன், செயலாற்றுமுன்னமே சேர்ந்துவிட்டீர்கள்! உங்களைப்போன்ற நல்லறிவாளர்கள் தமிழ் விக்கிக்கு ஒப்பரிய வளம் சேர்க்க இயலும். அருள்கூர்ந்து பங்களித்து வழிகாட்டுங்கள்! வருங்காலத்தில் தமிழ் விக்கி ஆணிப்பொன்னாய் விளங்க வேண்டும். அது தங்களைப்போன்ற நல்லறிவாளர்களின் பங்களைப்பால் மட்டுமே உறுதி பெறும். உங்களை வருக வருக என்று வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். --[[பயனர்:செல்வா|செல்வா]] 20:20, 5 ஜனவரி 2008 (UTC)
 
:ஐயா, வணக்கம். [http://www.thamizham.net/sales/icosales.htm இங்கு] தரப்பட்டுள்ள உங்கள் வெளியீடுகள் அனைத்திலும் ஒவ்வொன்றை எனக்கு அனுப்பும்படி வேண்டி மின்மடல் ஒன்றை உங்களுக்கு முன்னமே அனுப்பியுள்ளேன். அதற்கான விலையை உங்கள் வங்கிக் கணக்கில் ஏற்றி விடுவேன். வரும் தலைமுறைக்கு அவை இன்றியமையாதவை. அதிலும் எங்களைப் போன்ற தொழில்முறை புலம்பெயர்ந்தவர்களுக்குக் கண்டிப்பாகத் தேவை.
:இங்கு [[கல்வியியல்]], [[விலங்கியல்]], [[தமிழர்]] தொடர்பான கட்டுரைகளிலும் இன்ன பிறவற்றிலும் உங்கள் எழுத்துக்களைக் காண ஆவலாக உள்ளேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 04:55, 7 ஜனவரி 2008 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/200673" இருந்து மீள்விக்கப்பட்டது