"தொடர்வண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

78 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[படிமம்:Tren a las nubes cruzando Viaducto la Polvorilla.jpg|thumb|250px|தொடர்வண்டி]]
 
'''தொடர்வண்டி''' அல்லது '''தொடருந்து''' ('''புகைவண்டி''', '''இரயில்''', [[இலங்கை]] வழக்கு- '''புகையிரதம்''', '''கோச்சி''') என்பது இரும்புப் பாதைகள் என்று சொல்லப்படும் தண்டவாளங்களின் வழியாக ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்லக் கூடியதுமான ஒரு [[போக்குவரத்து]] வண்டியாகும். இதற்கு பயன்படும் தண்டவாளங்கள் இரண்டு உருக்கினாலான தடங்களாகவோ, அல்லது புதுவரவான ஒற்றைத் தண்டவாளமாகவோ, அல்லது காந்தத் தண்டவாளமாகவோ இருக்கலாம்.
 
தொடர்வண்டி முன்னர் செல்வதற்கான உந்து சக்தியானது ஒரு தனியான வண்டி மூலமோ அல்லது பல [[மின்னோடி|மோட்டார்]]கள் மூலமோ அளிக்கப்படுகிறது. தொடர்வண்டி அறிமுகமான கால கட்டத்தில் [[குதிரை]]கள் மூலமும் அதன் பின்னர் பல வருடங்களுக்கு [[நீராவி]] மூலமும் அதன் பின்னர் தற்பொழுது டீசல் அல்லது மின் ஆற்றல் மூலமும் உந்து சக்தி அளிக்கப்படுகிறது.
== தொடர்வண்டிகளின் வகைகள் ==
 
நீராவித்தொடர்வண்டி, நிலக்கரித்தொடர்வண்டி, அகலப்பாதை தொடர்வண்டி, மீட்டர் பாதை தொடர்வண்டி, எலக்ட்ரிக் தொடர்வண்டி, பறக்கும் தொடர்வண்டி, மெட்ரோ தொடர்வண்டி, அதிவேக தொடர்வண்டி என பல வகைகள் உள்ளன.
 
தொடர்வண்டி பயணம் செய்யும் இடத்தை பொறுத்தும் சில வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை, புறநகர் தொடர்வண்டி, நகரத்தொடர்வண்டி.
 
தொடர்வண்டியின் வேகத்தை பொருத்தும் வகைகள் மாறுபடுகின்றன.எடுத்துக்காட்டு விரைவுத்தொடர்வண்டி,பயனிகள் தொடர்வண்டி
சரக்குத் தொடர்வண்டிகள் சரக்குப் பெட்டிகளை இழுத்துச் செல்கின்றன. திட, நீர்மப் பொருட்களை எடுத்துச் செல்ல வெவ்வேறு பெட்டிகள் உள்ளன. உலகின் பெரும்பாலான சரக்குப் போக்குவரத்து தொடர்வண்டிகள் மூலமே நடைபெறுகிறது. சாலையை விட தொடர்வண்டியில் பொருட்களை எடுத்துச் செல்வது பயனுறுதிறன் மிக்கதாகும்.
 
சில நாடுகளில் சரக்குள்ள சரக்குந்துகளே நேரடியாக தொடர்வண்டியின் மீது வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் சரக்குகளேசரக்குகளை ஏற்றி இறக்கும் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் கொங்கண் இரயில்வேயில் இத்தகைய நடைமுறை உள்ளது.<ref>http://www.hinduonnet.com/2004/06/12/stories/2004061211920300.htm</ref>
 
==இலங்கையில் தொடர்வண்டி==
இலங்கைக்கு ஆங்கிலேயரால் தான் தொடர்வண்டி கொண்டுவரப்பட்டது. இது முதலில் பொருட்களை ஏற்றி செல்லவே பயன்பட்டது. பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இலங்கை அரசாங்கத்தால் மனிதர்களையும் ஏற்றும் வகையில் செய்யப்பட்டது.
 
== காட்சியகம் ==
 
== மேற்கோள் ==
<references />.
 
== மேலும் பார்க்க ==
* [[இந்திய இரயில்வே]]
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:இரும்புவழிப் போக்குவரத்து]]
31,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2007607" இருந்து மீள்விக்கப்பட்டது