"தொங்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

77 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தொங்கா''' (''Tonga'', [[தோங்க மொழி|தொங்கா மொழி]]: ''Puleʻanga Fakatuʻi ʻo Tonga''), அதிகாரபூர்வமாக '''தொங்கா இராச்சியம்''' (''Kingdom of Tonga'') என்பது [[பொலினீசியா]]வில் அமைந்துள்ள ஓர் [[இறைமை]]யுள்ள நாடாகும். இது 177 தீவுகளைக் கொண்ட ஒரு [[தீவுக்கூட்டம்]] ஆகும். மொத்தப் பரப்பளவு ஏறத்தாழ 750 சதுரகிலோமீட்டர்கள் கொண்ட 177 தீவுகளை உள்ளடக்கிய இத் [[தீவுக்கூட்டம்]] தெற்குப் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] 700,000 சதுரகிமீ தூரம் பரவியுள்ளன. தொங்காவின் 103,000 மக்கள்தொகையும்52 தீவுகளில் வசிக்கின்றனர்.<ref>{{cite web|url=http://www.tongaholiday.com|title=Tourism Tonga - The Best Year-round South Pacific Holiday Destination|work=tongaholiday.com}}</ref> 70 வீதமான தொங்கர்கள் தொங்காதாப்பு என்ற முக்கிய தீவில் வசிக்கின்றனர்.
 
தொங்கா வட-தெற்கு கோட்டில் கிட்டத்தட்ட 800 கிமீ தூரம் பரந்து காணப்படுகிறது. இது வடமேற்கே [[பிஜி]], [[வலிசும் புட்டூனாவும்|வலிசு புட்டூனா]] ஆகிய நாடுகளினாலும், வடகிழ்க்கே [[சமோவா]]வினாலும், கிழக்கே [[நியுவே]]யினாவும், வடமேற்கே [[கெர்மாடெக் தீவுகள்|கெர்மாடெக் தீவுகளினாலும்]] ([[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] பகுதி), மேற்கே [[நியூ கலிடோனியா]] (பிரான்சு), [[வனுவாட்டு]] ஆகியவற்றினாலும் சூழ்ந்துள்ளது.
 
1773 இல் [[ஜேம்ஸ் குக்]] இங்கு வருகை தந்த போது அவர் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டதனால், இத்தீவு ''நட்புத் தீவுகள்'' என அழைக்கப்பட்டது. அவர் வந்திறங்கிய போது அங்கு ''இனாசி'' என்ற ஆண்டுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ்விழாவின் போது தீவுகளின் தலைவருக்கு முதல் பழங்கள் வழங்குவது வழக்கமாக இருந்தது.<ref>Mariner, William and Martin, John (1817). ''An account of the natives of the Tonga islands in the south Pacific ocean: With an original grammar and vocabulary of their language. Compiled and arranged from the extensive communications of Mr. William Mariner, several years' resident in those islands'', Volume 2, [https://books.google.com/books?id=AD9CAAAAIAAJ&pg=PA64 pp. 64–65]. Retrieved 3 November 2010.</ref>
[[பகுப்பு:ஓசியானிய நாடுகள்]]
[[பகுப்பு:தீவு நாடுகள்]]
[[பகுப்பு:தீவுக்கூட்டங்கள்]]
1,15,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2008924" இருந்து மீள்விக்கப்பட்டது