மார்த்தாண்ட வர்மர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
வலுவுள்ள படையொன்றைத் திரட்டிய மார்த்தாண்ட வர்மர் அயல் நாடுகளின் மீது படையெடுத்து அவற்றை வேணாட்டுடன் இணைத்துக் கொண்டார். இவற்றுள் பல டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியாரின் கூட்டாளிகளாக இருந்தனர். இதனால் டச்சுக் கம்பனியார் மார்த்தாண்ட வர்மர்மீது போர் தொடுத்தனர். 1741 ஆம் ஆண்டில் இடம்பெற்ற [[குளச்சல் போர்|குளச்சல் போரில்]] டச்சுக்காரர் தோல்வியைத் தழுவினர். டச்சுத் தளபதியான [[யுஸ்ட்டாக்கியஸ் டி லனோய்]] (Eustachius De Lannoy) பிடிபட்டான். மார்த்தண்ட வர்மருடைய படையில் சேர்ந்து வீரர்களுக்கு நவீன போர்முறையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் அவன் கொல்லாமல் விடப்பட்டான்.
 
நவீனப் படுத்தப்பட்ட படைகள் [[கொச்சி]] வரை சென்று எல்லாச் சிறிய அரசுகளையும் கைப்பற்றின. பின்னர் கொச்சி அரசரோடு ஒப்பந்தம் செய்து கொண்டு நாட்டின் வடக்கு எல்லையில் அமைதி நிலவச் செய்தார் மார்த்தாண்ட வர்மர். [[திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்|திருவனந்தபுரம் பத்மநாபன்பத்மநாபசாமி கோயிலைத்]] திருத்தி அமைத்த இவர், தனது அரசை அங்குள்ள இறைவனுக்கே காணிக்கையாக்கித தன்னை ஸ்ரீபத்மநாபனின் அடியவனாகக் கருதி நாட்டை ஆண்டுவந்தார். இவர் 1758 ஆம் ஆண்டில் காலமானார்.
 
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/மார்த்தாண்ட_வர்மர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது