"திருப்பாவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,245 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''திருப்பாவை''' பன்னிரண்டு வைணவ [[ஆழ்வார்]]களில் ஒருவரான [[ஆண்டாள்]] பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் [[பாவை நோன்பு]] நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
 
==முதற்பாடல்==
 
: மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
:: நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
: சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
:: கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
: ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
:: கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
: நாராயணனே நமக்கே பறை தருவான்
:: பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/201338" இருந்து மீள்விக்கப்பட்டது