திருப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''திருப்பாவை''' பன்னிரண்டு வைணவ [[ஆழ்வார்]]களில் ஒருவரான [[ஆண்டாள்]] பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் [[பாவை நோன்பு]] நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
 
இதன் இரண்டாம் பாடல், நெய் உண்ணமாட்டோம், பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், தீய நூல்களைப் படிக்காதிருத்தலையும், பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.
இதன் இரண்டாம் பாடல் நோன்பு நோற்கும் விதத்தையும், மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் [[துயில்]] எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.
இதன் இரண்டாம் பாடல் நோன்பு நோற்கும் விதத்தையும், மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், வயல்களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும், பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும், எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் [[துயில்]] எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.
 
==முதற்பாடல்==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது