ஒக்கவாங்கோ ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 71:
| footnotes =
}}
'''ஒக்கவாங்கோ ஆறு''' (''Okavango River'') தென்மேற்கு [[ஆப்பிரிக்கா]]வில் [[அங்கோலா]] நாட்டின் [[பீடபூமி]]யில் உற்பத்தியாகி, 1,600 கிலோமீட்டர்கள் (990 மைல்கள்) பயணித்து தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் [[கலகாரிப் பாலைவனம்|கலகாரிப் பாலைவன]] மையப்பகுதியில் [[கழிமுகம்|கழிமுகமாக]] ''டெல்டாவாக'' மாறும் [[ஆறு]] ஆகும். ஆப்பிரிக்காவின் தெற்கே நான்காவது நீளமான ஆறாக விளங்கும் இது [[அங்கோலா]]வில் ஆரம்பமாகின்றது. அங்கோலாவின் இது '''குபாங்கோ ஆறு''' (Cubango River) என அழைக்கப்படுகிறது.<ref>[http://pixshark.com/cubango-river-map.htm pixshark.com - image galleries with a bite!], Showing (14) Pics For (Cubango River Map)</ref>
 
பொதுவாக ஆறுகள் இறுதியாக கடலில் கலப்பதுதான் இயல்பு ஆனால் ஒக்கவாங்கோ ஆறு, மற்ற ஆறுகளைப்போல் கடலில் சங்கமிக்காமல் மாறாக [[கலகாரிப் பாலைவனம்|கலகாரிப் பாலைவன]]த்தில் ஒரு [[கழிமுகம்|கழிமுகமாக]] மாறிவிடும் ஆறாக உள்ளது. மேலும் இவ்வாறு, [[அங்கோலா|தெற்கு அங்கோலா]]விற்கும், [[நமீபியா]]விற்கும் ஒரு [[எல்லைக்கோடு|எல்லைக் கோடாக]] அமைந்ததோடு [[போட்சுவானா]]வில் பாய்கிறது.<ref>[http://www.namibweb.com/okavangoriver.htm Namibweb.com The Okavango River</ref>
 
== பருவகாலம் ==
[[அங்கோலா]] [[பீடபூமி]]யின் [[மாரிகாலம்|மாரிக்காலமாக]] அறியப்படும் [[நவம்பர்]] மாதம் முதல், [[பிப்ரவரி]] மாதம் வரை இப்பிராந்தியத்தில் பெய்யும் [[மழை|மழை நீர்]] இவ்வாற்றின் மூலம் பயணித்து [[கலகாரிப் பாலைவனம்|கலகாரிப் பாலைவனப்]] பகுதியின் [[கோடைகாலம்|கோடைகாலமான]] [[மே]] மாதத்தில் கலகாரி [[கழிமுகம்|கழிமுகப்]] பகுதியை வந்தடைகின்றன, அதே காலக்கட்டத்தில் இப்பகுதியில் மிகுந்த வறட்சி நிலவும் காலமாக காணப்படுகிறது. மேலும் [[மே|மே மாதம்]] முதல், [[சூலை|சூலை மாதம்]] முடிய நீர் நிறைந்து காணப்படும் [[கழிமுகம்|கழிமுகப்]] பகுதி [[ஆகத்து]] மாதத்திற்கு பின்பு படிப்படியாக நீரின்றி சுருங்கி விடுகிறது.<ref>[http://www.sergireboredo.com/ing/rpv/botswana/infobotswana.htm sergireboredo.com/ing</ref>
 
== மேற்சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்கவாங்கோ_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது