பரிதி இளம்வழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 23:
}}
 
'''பரிதி இளம்வழுதி'''  (பிறப்பு; சென்னை,  11 நவம்பர் 1959) என்பவர் ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியாவார். இவர் தனது பள்ளி இறுதியை  வெஸ்லி  மேல்நிலைப்பள்ளியில்  முடித்தார். இவர் [[தமிழக சட்டமன்றம்| தமிழக சட்டமன்றத்துக்கு]]  மொத்தம் ஆறு முறை 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 11வது சட்டமன்றத்தின் (1996-2001 ) காலகட்டத்தில் பேரவைத் துணைத் தலைவராக இருந்தார். மேலும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக 2006-2011 காலகட்டத்தில் இருந்தார். இவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக 28 ஆண்டுகள் (1984-2011) [[தி.மு.க]] சார்பில் இருந்தார். இவர் தனது 25வது வயதில் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு. க.]]வின் [[சத்தியவாணி முத்து]]வை எதிர்த்துப் போட்டியிட்டு [[பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)|பெரம்பூரில்]] வெற்றிபெற்றார். [[எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|எழும்பூர்]] தொகுதியில் 1989 முதல் 2011வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய 1991-1996 காலகட்டத்தில் சட்டமன்றத்தில் ஒரே ஒரு திமுக உறுப்பினராக இவர் செயல்பட்ட விதத்தைக் கண்டு தி.மு.க தலைவர் [[மு. கருணாநிதி|மு. கருணாநிதியால்]] இந்திரஜித், வீர அபிமன்யு ஆகியோருடன் ஒப்பிடப்பட்டு புகழப்பட்டார். இவர் தி.மு.க வில் துணைப் பொதுச்செயலாளராகவும் பதவியில் இருந்தார். இந்நிலையில்  தி.மு.கவில்  ஏற்பட்ட  கசப்பின்  காரணமாக கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.கவில் 28/06/13 அன்று இணைந்தார். அடுத்த நாளே அ.தி.மு.கவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.<ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/parithi-ilamvazhuthi-ponnusamy-join-aiadmk/article4859849.ece</ref> <ref>http://timesofindia.indiatimes.com/city/chennai/Days-after-Parithi-joins-AIADMK-son-held-for-abusing-CM/articleshow/20935630.cms</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பரிதி_இளம்வழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது