சூரிய மலர் இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 2:
 
== பின்னணி ==
நவம்பர் 11 நினைவுறுத்தும் நாளில் பிரித்தானிய முன்னாள் போர் வீரர்களின் நலனுக்காக பொப்பி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெண்கள் பொப்பி மலர்களை விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தை முன்னாள் போர் வீரர்களுக்கு வழங்கி வந்தார்கள். இல்ங்கையில்இலங்கையில் இருந்து பங்குபற்றிய போர் வீரர்களுக்கு சிறிய அளவு கொடுப்பனவுகளே வழங்கப்பட்டதாக தேசியவாதிகள் குறை கூறினர்.<ref name="Island"/> 1931 ஆம் ஆண்டில் இலங்கையின் முன்னாள் போர் வீரர் ஏலியன் பெரேரா என்பவர் தனது முன்னாள் சகாக்களின் நலனுக்காக இந்நாளில் பூவரசு மலர்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார்.<ref name="Island"/>
 
அடுத்த ஆண்டில் கொழும்பு தெற்கு இளைஞர் அணி இவ்வியக்கத்தில் இணைந்து கொண்டது. 1933 நவம்பரில் இவர்கள் சூரிய மலர் இயக்கத்தை ''அமைதியும் விடுதலையும்'' என்ற தொனிப்பொருளுடன் ஆரம்பித்தனர்.<ref name="Island"/> இலங்கையின் வீதிகளில் இளைஞர்களும் பெண்களும் சூரிய மலர்களை விற்பனை செய்தனர். டொரீன் யங் (எஸ். ஏ. விக்கிரமசிங்காவின் மனைவி), செலினா பெரேரா போன்ற பெண்கள் இவ்வியக்கத்தில் முக்கிய பங்காற்றினர்.<ref name="Island"/> டொரீன் தலைவராகவும், டெரன்சு டி சில்வா, ரொபின் இரத்தினம் ஆகியோர் செயலாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். [[இரண்டாம் உலகப் போர்]] ஆரம்பமாகும் வரை இவர்கள் ஆண்டு தோறும் சூரிய மலர் விற்பனையை நடத்தி வந்தனர்.<ref name="lssp">{{cite web | url=https://www.marxists.org/history/etol/document/ceylon-srilanka/1965-history-LSSP.pdf | title=A Short History of Lanka Samasamaja Party | date=18 டிசம்பர் 1960 | accessdate=6 பெப்ரவரி 2016}}</ref> "ஒவ்வொரு சூரிய மலரும் ஏகாதிபத்தியம், பாசிசம், போர் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்" என்பதே இவ்வியக்கத்தின் இலக்காக இருந்தது. இவ்வியக்கத்தினரால் பெருமளவு பணம் திரட்ட முடியாவிட்டாலும், அன்றைய காலகட்டத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இளைஞர்களைத் திரட்ட இவ்வியக்கம் வழிவகுத்தது.<ref name="Island"/>
"https://ta.wikipedia.org/wiki/சூரிய_மலர்_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது