கூமாங்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
 
==பொதுவசதிகள்==
இக்கிராமத்தில் பொதுமண்டபத்தில் கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணியாற்றுகின்றனர். இதற்கு அருகில் முதியோர் சங்கமும் உள்ளது. இக்கிராமத்திலேயே சாய் சிறுவர் இல்லம் உள்ளது. 2014 ஆம் ஆண்டில் இருந்து இக்கிராமத்திற்கு சித்திரா நீர்த்திட்டம் ஊடாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கிராமத்தவர்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகின்றனர். இதை அன்றையை அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர ஆரம்பித்து வைத்தார். <ref>https://www.facebook.com/photo.php?fbid=10205574618548834&set=a.10205574592228176.1073741853.1353866268&type=3&theater</ref> இக்கிராமத்தில் வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபையின் நூலகமும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்கம், மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கமும் அமைந்துள்ளது. இதைவிட மரணசங்கமும் உள்ளது. இக்கிராமத்தில் சித்திவிநாயகர் பாடசாலையும் அதனுடன் அமைந்துள்ள விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது. ஸ்ரீ சித்திவிநாயகர் முன்பள்ளி, அம்பாள் முன்பள்ளியும், ஜெயா முன்பள்ளி என மூன்று முன்பள்ளி இக்கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வயல்வெளிகளும் உள்ளது. இக்கிராமத்தில் சிறு கைத்தொழில் முயற்சிகளாக [[நொறுக்குத்தீனி]], பற்பொடி, [[நல்லெண்ணெய்]] தயாரிக்கபடுகிறது. இக்கிராமத்தில் அநேகமாகமானவர்களிடம் மலசலகூட வசதிகள் உள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கூமாங்குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது