ஆண்டாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
சி *திருத்தம்*
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''ஆண்டாள்''' [[தமிழகம்|தமிழத்தில்]] 8ம்8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[வைணவம்|வைணவ]] [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே [[பெண்]]ணாவார். ஆண்டாள், [[திருப்பாவை]], [[நாச்சியார் திருமொழி]] என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.
ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.
[[படிமம்:ஆண்டாள்.jpg|thumb|250px|ஆண்டாள்]]
 
== ஆண்டாளின் தோற்றமும் வாழ்க்கையும் ==
ஒரு குழந்தையாக, ஆண்டாள், [[துளசி]]ச் செடியின் கீழ் கிடந்தபோது, [[மதுரை]]க்கு அண்மையிலுள்ள [[ஸ்ரீவில்லிபுத்தூர்]] என்னும் ஊரில் வசித்துவந்த [[பெரியாழ்வார்|விஷ்ணுசித்தர்]] (பெரியாழ்வார்) என்னும் [[அந்தணர்]] ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு]] [[மலர்|மலர்கள்]] கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் [[குடும்பம்]] எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்[[குழந்தை]]க்கு இட்ட பெயர் கோதை.
 
இளம் வயதிலேயே [[சமயம்]], [[தமிழ்]] என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே [[கண்ணன்]] மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். [[கோயில்|கோயிலில்]] இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே ''"சூடிக்கொடுத்த சுடர்க்கொடி"'' என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
வரிசை 12:
 
== ஆண்டாள் பாடல்கள் ==
ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் [[திருப்பாவை]], [[நாச்சியார் திருமொழி]] என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.
 
இவரது முதல் படைப்பான [[திருப்பாவை]] 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.
 
இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது.இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது. கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ புகழ் பெற்றது<ref>http://www.kamakoti.org/tamil/divya68.htm</ref>
 
ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் குறிப்பாக திருப்பாவை நாட்டின் (தென்கலை மற்றும் வடகலை பின்பற்றும்) அனைத்து வைணவதலங்களிலும் வைணவர்களின் இல்லங்களிலும் தினந்தோறும் ஓதப்பட்டுவருகின்றதுஓதப்பட்டு வருகின்றது. மேலும் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களிலாயினும் வைணவர்களின் இல்லவிழாவாயினும் வடமொழி மறைகளுக்கு நிகராக தவறாமல் ஓதப்படுகின்றது.
 
== திருப்பாவைச் சிறப்பு ==
 
வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய யாதவனுக்கு உகந்த [[மார்கழி]] மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு. தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை. திருப்பாவை மூலம் தன்னை ஒரு ஆயர் குல பெண்ணாக உணர்த்துகிறாள் ஆண்டாள்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது