திறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 2:
'''திறை''' என்பது, பணிவு அல்லது அடங்கியிருத்தலுக்கு அடையாளமாக இன்னொருவருக்குக் கொடுக்கப்படும் பொருள் (செல்வம்) ஆகும். இது [[பணம்]], பொருள் போன்றவை மட்டுமின்றி, வலுக்கட்டாயமாக வலிமை குறைந்தவர் மீது திணிக்கப்படும் வணிக [[ஒப்பந்தம்|ஒப்பந்தங்கள்]] உருவிலும் இருக்கலாம். பொதுவாக, திறையைச் செலுத்தாவிட்டால் அதற்குரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்ற பயத்தின் அடிப்படையிலேயே திறை கொடுக்கப்படுகின்றது. முற்காலத்தில், வலிமை கொண்ட நாடுகள் மற்ற நாடுகளின் மீது படையெடுத்து அடிப்படுத்தியோ ஒப்பந்தங்கள் போன்ற வேறு வழிகள் மூலமோ அவற்றிடமிருந்து ஆண்டுதோறும் திறை பெறும் வழக்கம் இருந்தது. பொதுவாக, வலிமை குறைந்த நாடுகள், வலிமை கொண்ட நாடுகளுக்குத் திறை செலுத்தி வந்தன. இவ்வாறு திறை செலுத்திய நாடுகள் [[சிற்றரசு]]கள் எனப்பட்டன. நாடுகள் மட்டுமன்றி [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] போன்ற வணிக அமைப்புக்கள் கூட [[சிற்றரசர்]]களிடமிருந்து திறை பெற்றமைக்கான சான்றுகள் உண்டு.
 
பெரிய வலிமைமிக்க அரசுகளுடன் [[கூட்டணி]] வைத்துக்கொண்ட சிறிய அரசுகளும், மேற்படி பெரிய அரசுகளுக்குத் திறை செலுத்தும் வழக்கம் இருந்தது. இது, பொதுவாக, [[போர்]]களுக்குப் படை திரட்டுதல் முதலியவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. கி.மு ஐந்தாம் நூற்றாண்டில், [[டேலியன் கூட்டமைப்பு|டேலியன் கூட்டமைப்பைச்]] சேர்ந்த நகரங்கள், அக்கூட்டமைப்பிலிருந்த வலிமைமிக்க நகரான [[ஏதென்ஸ்|ஏதென்சுக்குத்]] திறை செலுத்தின. பண்டைக்கால பாரசீக ஆர்க்கிமெனிட் பேரரசு திறை பெற்ற பழங்காலத்துத் திறை பெறும் பேரரசுக்கு ஒரு எடுத்துக்காட்டு. மத்தியகாலத்து உருசியாவின் மங்கோல் ஆட்சியாளர்கள், உருசிய அரசுகளிடமிருந்து திறையை மட்டுமே எதிர்பார்த்தனர். அவ்வாறு திறை செலுத்திய உருசிய அரசுகள் தொடர்ந்தும் தங்கள் ஆட்சியுரிமையைத் தக்கவைத்திருந்தன. அசிரியா, பபிலோன், கார்த்தேஜ், ரோம் போன்ற பேரரசுகளும் தமது மாகாணங்களிடமிருந்தும், தாம் அடிப்படுத்திய நாடுகளிடமிருந்தும் திறை பெற்றன. பண்டைக்காலச் சீனா சப்பான், கொரியா, வியட்நாம், கம்போடியா, போர்னியோ, இந்தோனேசியா, மத்திய ஆசியா போன்ற நாடுகளிடமிருந்து திறை பெற்றது.<ref name="Lockard 2007">{{cite book|url=https://books.google.com/?id=yJPlCpzOY_QC&pg=PA315&dq=tribute#v=onepage&q=tribute&f=false|page=315|title=Societies, Networks, and Transitions: A Global History: To 1500|first= Craig A. |last=Lockard |publisher= Cengage Learning|year= 2007 |isbn=0-618-38612-2}}</ref>
 
==பிரித்தானிய இந்தியாவில் திறை==
"https://ta.wikipedia.org/wiki/திறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது